உங்கள் பகுதி செய்திகளை உடனடியாக உலகின் பார்வைக்கு அறியவைக்க தொடங்கப்பட்டதுதான் இந்த இதழ்.விரைவாக செய்திகளை அனுப்பி சரியான தீர்வினை பெற்றிட வேண்டுகிறோம்.

Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com - Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com -Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com

விருப்ப மனு

காட்டுமன்னார்கோவில்  தொகுதி
பகுஜன் சமாஜ் கட்சி சார்பில்
விருப்ப மனு




சென்னையில் பகுஜன் கட்சி தலைமையிடம் மாநில பொதுச்செயலாளர் பெரியார் அன்பன், மாநில மகளிரணி அமைப்பாளர் தமிழ்மதி மற்றும் மாவட்ட தலைவர் செந்தில்முருகன் முன்னிலையில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட  சேத்தியாத்தோப்பு கிளாங்காடு கலைவாணன் விருப்பமனு கொடுத்தபோது எடுத்த படம்.



விருப்ப மனுகொடுத்த கலைவாணன்
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தேர்தல் நெருங்குவதால் பரபரப்பு அடைந்துள்ளது. பலரும் தங்களுடைய கட்சியின் சார்பில் கட்சியில் விருப்ப மனு அளித்து வருகிறார்கள்.பலத்த எதிர்பார்ப்போடு இருக்கும் காட்டுமன்னார்கோவில் தொகுதியில்  போட்டியிட தேசியக்கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி சார்பில்    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு  கிளாங்காட்டை சேர்ந்த கலைவாணன் என்பவர்   விருப்ப மனு அளித்துள்ளார்.விருப்ப மனு அளித்துள்ள கலைவாணன் பற்றி  .....

கடலூர் மாவட்டம்  , புவனகிரி வட்டத்தில் உள்ள சேத்தியாத்தோப்பு கிளாங்காடு புது தெருவை சேர்ந்தவர்.தந்தையார் பெயர்  செளந்திரபாண்டியன் , கூலித்தொழிலாளி.உடன் பிறந்தோர்  மூவர். சுதந்திரமணி(அண்ணன்), மதிவாணன்(தம்பி), கெளரி (தங்கை).
ஆரம்பமுதலே இப்போது வரை விவசாய கூலி தொழிலாளியான குடும்பம் இவர்களது குடும்பம்.கல்லூரி படிப்பை முடித்துள்ளவர்.2006 முதல்  தன்னை பொது வாழ்க்கையில் ஈடுபடுத்திகொண்டு வருபவர். எங்கே யாருக்கு பிரச்னை என்றாலும் முதல் ஆளாக சென்று குரல்கொடுப்பவர். அனைத்து சமுதாய மக்களுக்காகவும் களத்தில் இறங்கி பேசுவார் என்பது இவரைப்பற்றி முழுவதுமாக அறிந்தவர்கள் கூறு கிறார்கள். திருமணம் ஆகிவிட்டது.

பகுஜன் சமாஜ் கட்சியில் கடலூர் மாவட்ட  இளஞரணி அமைப்பாளராக தற்போது பதவி வகித்து வருகிறார்.தன்னால் முடிந்தளவு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதையே கொள்கையாக வைத்து செயல்பட்டு வரும் இவர் தான் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் இவை எல்லாம் செய்து மக்களின் வாழ்க்கை தரத்தையே மாற்றுவேன் என்றும், விவசாயிகளுக்கு நிரந்தர வாழ்வதார மேம்பாடு என்னால் உருவாக்கி தருவதுதான் முதல் வேலை என்றும் கூறுகிறார்.அவர் காட்டுமன்னார்கோவில் தொகுதிக்கு செய்ய நினைப்பது......

1. காட்டுமன்னார்கோவில் பகுதியில் போதிய அளவு நீராதாரம் இருந்தும் விவசாயிகள் கண்ணீர் சிந்துவதே வாடிக்கையாக இருக்கிறது.அதிலும் இப்பகுதியின் மிக முக்கியமான நீராதாரம் வீராணம் ஏரி இருந்தும் இந்நிலை  உள்ளது.இதனை தவிர்க்க பாடுபடுதல்.

2. வழக்கமாக பருவகால மழையில் மக்கள் எவ்விதமான இன்னல்களை அனுபவிப்பார்கள் என்பதை சில மாதங்களுக்கு முன்பு வந்து தமிழகத்தை புரட்டிப்போட்ட  பெரும் மழை வெள்ளத்தினை நன்கு அறிந்துள்ளதால் காட்டுமன்னர்கோவில் பகுதியில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் தூர்வாரி சுத்தம் செய்யப்படும். அனைத்து பாலங்களும் பழுதுபார்க்கப்பட்டு , தேவைபடும் இடங்களில் புதியாபாலங்களும் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

3. மக்களை அச்சுறுத்தும் பேரிடர்களான புயல், மழை, வெள்ளக்காலங்களில் இப்பகுதி மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் விரைவாக செய்து தர இப்பகுதியில்  மிக அதிக  அளவிளான பேரிடர் தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையங்கள் நிறுவப்படும்.

4.இப்பகுதியில் படித்து பட்டம்பெற்ற மாணவர்கள் அதிகளவில் உள்ளார்கள்.அவர்களது குடும்பங்கள்  வறுமையில் உள்ளபோதும் அவர்களால் தங்களது குடும்பத்திற்கு எதுவும்  உதவிட முடியாத நிலை இருக்கிறது.இதற்கு ஒரு மாற்றாக அவ்வாறாக உள்ள படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கி தருவது.மகளிர் சுய உதவிகுழுக்கள் உள்ள பெண்களுக்கு மேம்பட்ட உதவிகள்,  அவர்களின்  தன்மைக்கு ஏற்ப வங்கி கடனுதவிகள்.

5.காட்டுமன்னார்கோவில் பேருந்து நிலையம் நீண்டகாலமாக  குறுகியதாக இருந்த வருகிறது.இதனை தரம் உயர்த்தி புறநகர் பேருந்து நிலையம் நவீன வசதிகளுடன் அமைப்பது. அனைத்து குக்கிராமங்களுக்கும்  சரியாண அளவில் பேருந்து வசதி ஏற்படுத்துதல்.

6.இங்குள்ள கல்வி நிலையங்களில் அதிகப்படியான கட்டணக்கொள்ளையை தடுக்கப்படும்.நிலையான கல்விக்கட்டணம் மாணவர்களிடம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

7.அனைத்து கல்வி நிலையங்களிலும்  அரசு விதிமுறைப்படி வகுக்கப்பட்டுள்ள தாழ்த்தப்பட்ட , பிற்படுத்தப்பட்ட,  சிறுபான்மையின மக்களுக்கான இடஒதுக்கீட்டினை கல்வி நிலையங்கள் கட்டாயமாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதை தொடர்நது பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக போராடி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

8.வீராணம் ஏரியை மேம்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் திருத்தங்கள் செய்யப்படும்.மற்றும் இப்பகுதியில் வந்து குவியும் பறவைகள், மற்றும் மயில்களை காக்கும்பொறுட்டு மயில்கள் சரணாலயம், பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும்.பல நாட்களாக இப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையான வீராணம் ஏரியை சிறந்த சுற்றுலா தளமாக மாற்றிட நடவடிக்கை எடுக்கப்படும்.

9.காட்டுமன்னார்கோவில் அல்லது ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில்   ஏதாவது ஒரு இடத்தில் அரசு இருபாலர் கலைக்கல்லூரி அமைக்கப்படும்.

10.தொகுதியிலுள்ள அனைத்து இடங்களிலும் மக்களுக்கு அடிப்படை  தேவைகளான சுத்தமான குடிநீர், சுகாதாரமான வாழ்க்கைமுறை, இயல்பான வேலைவாய்ப்புக்கள் என்ற உருவாக்கி தரப்படும். என்று அவரால் கூறப்பட்டது.




பகுஜன் சமாஜ் கட்சி என்றால்   நாட்டின் அனைத்து பகுதியிலும் இருக்கும் மொத்த மக்கள் தொகையில் 85 சதம் மக்கள்  தங்களுக்கான அனைத்து வாய்ப்புகளிலும் இன்னமும் எவ்

திமான  அடிப்படை வசதிகளையும் பெறாமல் உள்ளார்கள்.அவர்களை சமூகத்தின் மேல் மட்டத்திற்கு கொண்டு வருவது.அரசுத்துறை, அரசியல் போன்ற இடங்களில் இவர்களுக்கு சரிசமமான வாய்ப்புக்கள் கிடைக்கசெய்வது.இதனை முன்னெடுத்து பாடுபட்ட கட்சியின் அரசியல் முன்னோடிகள் சட்டமேதை டாக்டர் அம்பேத்கார், பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் தாதா சாகேப் கன்ஷிராம், இந்தியாவின் ,இரும்பு மங்கை  பகுஜன் சமாஜ்கட்சியின் தேசிய தலைவர் பெகன்ஜி மாயாவதி ஆகியோர் காட்டியுள்ள வழிகாட்டலில் பாடுபடுதல்.



தமிழகத்தில் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தாத 50 ஆண்டுகளாக மாற்றி , மாற்றி ஆளும்  திராவிடக்கட்சிகளை தமிழகத்தில் அகற்றிவிட்டு பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பிள்  நிலையான மக்கள் ஆட்சியை அமைப்பது.தேசியக்கட்சியான இதை தமிழக மக்கள் தற்போது ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருப்பதை  இன்னமும் அதிகப்படுத்துவது.இக்கட்சியின் அடிப்டை கோட்பாடே எப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் உடனடியாக அவர்களுக்காக பாடுபடுவது. சாதி, சமயங்களை கடந்து சமுதாய நல்லிணக்கத்திற்காக அனைவரையும் ஒன்றினைப்பதே எங்களின்நோக்கம் என்று காட்டுமன்னார்கோவில் தொகுதிக்கு விருப்ப மனு கொடுத்துள்ள சேத்தியாத்தோப்பு கிளாங்காடு கலைவாணன் கூறினார்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக