மரு.அன்புமணியின் இன்றையே பேட்டி
* தேர்தலுக்கு அறுபதே நாட்கள உள்ள நிலையில் தேர்தல் பணிகளை பாமக தீவிரப்பட்டுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.
கட்சி நிர்வாகிகள் உற்சாகமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
* கடந்த 50 ஆண்டுகளாக இல்லாத ஒரு புதிய அரசியல் களம் முதல்முறையாக தமிழகத்தில் உருவாகியுள்ளது.
* மக்களின் மனநிலை என்ன என்பது எங்கள் கட்சி நடத்திய internal survey மூலம் தெளிவாகியுள்ளது. 110 தொகுதிகளில் 4ஆயிரம் இளைஞர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 82% இளைஞர்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
* மக்களின் பிரச்சனைகளை விஞ்ஞானப்பூர்வமாக அனுகும் கட்சி பாமக. மது ஒழிப்பில் தமிழகம் முழுவதும் பெண்களின் ஆதரவு பாமக விற்கு அதிகரித்தது வருகிறது.
* பாமக ஏழு மண்டல மாநாடு மற்றும் மாநில மாநாடு, ஏழு நகரங்களில் ஏழு தலைப்புகளில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்சிகள் அனைத்தும் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
* மற்ற கட்சிகளை போல் பிறரின் வருகைக்காக காத்திருக்காமல் இந்த தேர்தலை பாமக தைரியத்துடன்,தன்னம்பிக்கையுடன் சந்திக்க போகின்றது. சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
*அதிமுக மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை போல் அதிமுக பெரும் தோல்வியை சந்திக்கும்.
* திமுக மூழ்கும் கப்பல். அந்த கப்பலில் ஏற பிற கட்சிகள் தயக்கம் காட்டுகின்றன.
* திமுகவும் அதிமுகவும் லெட்டர்பேட் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வருகின்றனர். எங்களுக்கு எதிரிகளே இல்லை என்ற ஜெயலலிதா இன்று சிறு சிறு அமைப்புகளுடன் கூட்டணி அமைக்கிறார். திமுக யாரும் கூட்டணிக்கு வராததால் நம்பிக்கை இழந்து பயத்தில் உள்ளது.
* பாமக வேட்பாளர் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. ஓரிரு வாரங்களில் வெளியிடப்பட்டும்.
*பாமக வடமாவட்ட கட்சி என்ற மாயை உடைந்துள்ளது. தென்மாவட்டத்தில் பாமக விற்கு ஆதரவு பெருகியுள்ளது. இரு திராவிட கட்சிகளையும் சாராத பொதுவான மக்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
* தமிழகத்தில் தற்பொழுது ஏற்பட்டுள்ள ஐந்து முனை போட்டி எங்களுக்கு சாதகமானது. தமிழக அரசியலில் தற்பொழுது உள்ள வெற்றிடத்தை பாமகவால் மட்டுமே நிரப்ப முடியும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
* எங்களின் கொள்ளைகள் மீது மக்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளதால் டெல்லியில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் போல் தமிழகத்திலும் அரசியல் மாற்றம் நிகழும்.
* பாமகவின் தேர்தல் அறிக்கை இறுதி கட்டத்தில் உள்ளது. இன்னும் சில வாரங்களில் வெளியிடப்பட்டும்.
* உடுமலைபேட்டை சம்பவத்தை பாமக கண்டித்திருக்கிறது. தேவைப்பட்டால் போராட்டம் நடத்தவும் தயங்காது.
* தமிழகத்தில் எந்த மூலையில் எந்த நிகழ்வு நடந்தாலும் பாமகவே காரணம் என எங்களை ஊடகங்கள் சிலுவையில் அறைகின்றன.
இரு கட்சிகளை சார்ந்த ஊடகங்கள் தான் எங்களின் மீது அவதூறு பரப்புகின்றன.
*தங்க நகைகளுக்கு கலால் வரி, பெட்ரொல் விலை அதிகரிப்பு போன்றவை கண்டிக்கதக்கவை.
அனைத்து கட்சிகளும் சேர்ந்து இதனை எதிர்க்க வேண்டும்.
*புகையிலை பொருட்களின் மீதான எச்சரிக்கை விளம்பரங்களை 50% மாக குறைக்கும் முயற்சி கண்டிக்கதக்கது. வருடத்திற்கு 10 லட்சம் மக்கள் புகையிலையால் இறக்கின்றனர். நாடாளுமன்ற குழுவின் பரிந்துரையை அமல்படுத்தக்கூடாது. பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும்.
பாஜக அரசு முதலாளிகளுக்கான அரசாக திகழக்கூடாது. மக்களுக்கான அரசாக இருக்க வேண்டும்.
#Anbumani4CM
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக