தனித்து போட்டி என்று விஜயகாந்த் அறிவித்தது கருணாநிதி முதல் பெரிய அடி என்றால், விஜயகாந்த் வந்தால் எங்களுக்கு 50 தொகுதிகள் பரவாயில்லை, வராவிட்டால் எங்களுக்கு 90 தொகுதிகள் தரவேண்டும் என்று காங்கிரஸ் அடம்பிடிக்கத் தொடங்கி இருப்பது இரண்டாவது பெரிய அடி !
இனி காங்கிரஸ் விட்டால் கருணாநிதிக்கு வேறு கதி இல்லை என்பதால், கருணாநிதியிடம் இருந்து 120 முதல் 90 தொகுதிகள் வரை பெற முயற்சி செய்யுங்கள் என்று தமிழகக் காங்கிரசார் சோனியாகாந்திக்கும் ராகுல்காந்திக்கும் தந்தி அடித்து இருக்கிறார்கள். கூடுதலாக கூட்டணி அமைச்சரவை அமைப்பது பற்றியும் நிர்பந்தியுங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்.
கருணாநிதிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. காங்கிரஸை கழற்றி விட்டு தனித்து நின்று விடுவோம் என்று மு.க. தாலின் தரப்பினர் தலைமையை வற்புறுத்தத் தொடங்கியுள்ளனர். இன்று மாலை அலல்து நாளை மாலைக்குள் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் தூக்கி எறியப்படலாம் என்று நம்பகமான தகவல்கள் அறிவாலயத்தில் அள்ளுகிறது !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக