அரியலூர்: டிராக்டரை ஜப்தி செய்ததால் அவமானம் தாங்க முடியாமல் விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அரியலூரை அடுத்த ஒரத்தூர் கிராமத்தில் விவசாயி அழகர் தற்கொலை செய்து கொண்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. சோழமண்டலம் பைனான்ஸில் டிராக்டர் வாங்க ஏழு லட்சம் ரூபாயை விவசாயி அழகர் கடன் பெற்றிருந்தார். கடனில் ரூ.5 லட்சம் ரூபாய் திருப்பி செலுத்திவிட்ட நிலையில், ரூ.2 லட்சம் பாக்கி செலுத்த வேண்டும். பைனான்ஸ் ஊழியர்கள் நேற்று அழகரின் டிராக்டரை ஜப்தி செய்து எடுத்துச் சென்றனர். டிராக்டர் ஜப்தி செய்யப்பட்டதால் அவமானம் தாங்காமல் அழகர் தூக்கில் தொங்கினார்.
முன்னதாக 2 நாளுக்கு முன்னர் தஞ்சாவூரில் விவசாயி ஒருவர் வாங்கிய கடனை செலுத்த தவறியதால் போலீஸ் மற்றும் பைனான்ஸ் ஊழியர்களால் அடித்து இழுத்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக