இலங்கை அகதி தற்கொலை......
அகதிகளின் உயிர்கள் மீது அலட்சியம் காட்டும் தமிழக அரசை, தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
மதுரை திருமங்கலம் அருகே உள்ள உச்சம்பட்டி இலங்கை அகதிகள் முகாமைச் சார்ந்த ரவீந்திரன், அகதிகளை கொடுமைப்படுத்தும் அகதிகள் முகாம் அதிகாரிகளின் அட்டூழியங்களைக் கண்டித்து, உயர் மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை.
அகதியின் தற்கொலைக்கு காரணமான காவல்துறை மற்றும் அகதிகள் முகாம் வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அயோக்கிய அதிகாரிகளையும், அகதிகளின் உயிர்கள் மீது அலட்சியம் காட்டும் மக்கள் விரோத தமிழக அரசையும், தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
அகதி தற்கொலைக்கு காரணமான காவல்துறை மற்றும் அகதிகள் முகாம் வருவாய்த்துறை அதிகாரிகளைக் கைது செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திடவும், அகதிகள் சுதந்திரமாக உயிர்வாழ உத்திரவாதம் வழங்கவும், தமிழக அரசை தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி வலியுறுத்துகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக