விஜயகாந்த் அறிவிப்பால் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு பாதிப்பா? குஷ்பு பதில்
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு டெல்லியில், அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார். பின்னர் குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, தனித்துப் போட்டியிடுவதாக விஜயகாந்த் அறிவித்துள்ளது குறித்து கேட்டதற்கு பதில் அளித்த அவர்,
தேமுதிக தனித்து போட்டியிடுவதால் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதிமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதே அனைவரின் நோக்கம் ஆகும். அதிமுகவுக்கு வாக்களிப்பதில்லை என்று மக்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டார்கள். 5 ஆண்டு அதிமுக ஆட்சி மீதான ஊழல் புகார் குறித்து மக்களுக்கு நன்றாக தெரியும். அதிமுக ஆட்சி மீதான ஊழல் பட்டியலை ஆளுநரிடம் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கொடுத்துள்ளார் என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக