சேத்தியாத்தோப்பு அருகே
அள்ளூரில் திடீர் சாலை மறியல்
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே அள்ளூரில் திடீர்சாலை மறியல் ஏற்படட்தால் பரபரப்பு.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது அள்ளூர் கிராமம்.அள்ளூர் காலனிதெருவில் வசிக்கும் அள்ளூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஞானமணி என்பவரின் மகன அஜித்குமார்(24) .இவர் சென்னை அருகே உள்ள பெரம்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பொறியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் சில தினங்களுக்கு முன்பு கல்லூரியில் மர்மமான முறையில் இறந்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து அதிர்ச்சியடைந்த அவர்களது நண்பர்கள், உறவினர்கள் குடும்பத்தினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று மதியம் இரண்டு மணியளவில் சென்னை கும்பகோணம் சாலையில் அள்ளூர் ஓம்சக்தி கோவில் அருகில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.அப்போது மர்மமான முறையில் இறந்த மாணவர் அஜித்குமார் இறப்புக்கு காரணமானவகைள் மேல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்று விசிக மாவட்ட செயலாளர் அறவாழி, பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட இளஞரணி அமைப்பாளர் கலைவாணன் தலைமையில் கோஷங்களை எழுப்பினார்கள்.உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சேத்தியித்தோப்பு போலீசார் சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உங்களின் கோரிக்கையை அதிகாரிகளுக்கு தெரிவித்து அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதியளித்ததின்பேரில் சாலை மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றார்கள். இதனால் சென்னை கும்பகோணம் பரபரப்பான சாலையில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேத்தியாத்தோப்பு அருகே அள்ளுரில் திடீர் சாலை மறியல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக