View Edit History
Uma Magi
திமுக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
விஜயகாந்த் திமுக கூட்டணியில் சேரவில்லையென்பது ஒரு செய்தி. அவ்வளவே . சேதியை பீதியாக்க வேண்டாம்.
நம்மை விமர்சித்தால் நாசூக்காய் பதிலடி தரலாம். அதுவேறு. ஆனால் இங்கு வரவில்லையென்பதை கண்டுகொள்ளாமல் விடுவதே நல்லது.
அவர் ஏதோ "தில்"லாக இந்த முடிவெடுத்தாற்ப
ோல் சிலர் கொண்டாடுடதும் கூட நகைப்புக்குரியதுதான். எலெக்ஷன் அறிவித்தவுடன் தனியாய் நிற்பதாக அவர் சொல்லவில்லை. நாற்புறமும் முட்டி மோதிவிட்டு நினைத்தது நடக்கவில்லையென வேறுவழியின்றி இப்படி அறிவித்திருக்கிறார்.
பல வீடுகளில் பஜ்ஜி,சொஜ்ஜி சாப்பிட்டுவிட்டு பொண்ணு பிடிக்கலன்னு சொன்ன கதையா.... ச்சீ ச்சீ இந்தப்பழம் புளிக்கும் என்ற கதையாகன்னும் சொல்லலாம்.
பொது எதிரி அதிமுக என்ற நிலையில் அதை எதிர்க்கும் கட்சிகள் ஒன்று சேர வேண்டுமென்ற நோக்கில் தலைவர் கூட்டணியை விரும்பினார். யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. வந்தால் மகிழ்ச்சி... வராவிட்டால் அதைவிட மகிழ்ச்சி... நாளையே மனம் மாறி காட்சி மாறினாலும் அதையெல்லாம் தலைமை பார்த்துக் கொள்ளும்.
மற்றபடி இவர்களைத்திட்டி அரசியல் செய்ய வேண்டிய அவசியம் நமக்கில்லை. நமக்கு ஆயிரம் வேலைகள் இருக்கின்றன . ஒரு வரி கமெண்ட்டில் கடந்து போக வேண்டிய விஷயம் அது.
தன்னுடைய நிலை என்ன, அரசியலில் தான் யார் என்பது பிறரை விட தேமுதிகவுக்குத்தெரியும். கூட்டணி வைத்தாலும், தனியாய் நின்றாலும் அவர்களுடைய கெப்பாசிட்டி என்னவென்று நன்கு உணர்ந்தவர்கள் அவர்கள்.
ஏகப்பட்ட யூகங்களுக்கு வழிவகுத்து விட்டு அவர்கள் இப்படி ஒரு அபாய முடிவெடுத்திருப
்பதிலிருந்து ஒன்று மட்டும் புரிகிறது. கெளரவமான அரசியல் பயணம், அவமானகரமான ஆனால் லாபகரமான தோல்வி மற்றும் அரசியல் அஸ்தமனம் இவைதான் தேமுதிகவின் முன் உள்ள சாய்ஸ்.. அவர்கள் துணிச்சலாய் ஆப்ஷன்" B"-யைத் தேர்ந்தெடுத்திர
ுக்கிறார்கள்.
நாம் செய்ய வேண்டியது நமது வெற்றிக்கான வேலைகளையே தவிர... அவர்களின் தோல்விக்கான ஆராய்ச்சியை அல்ல....
புது வாக்காளர்களுக்கும், அதிமுக அதிருப்தியாளர்க
ளுக்கும் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை நாம் உணர்த்தினாலே போதும். நமது வெற்றி நிச்சயம். அதற்கான வேலையைச் .செய்வோம்
இவை எல்லாவற்றிற்கும் மேலாய் இன்னொரு கடமை நமக்குண்டு. அது விஜயகாந்துக்கு நாம் நன்றி சொல்வது. ஆம். இலட்சக்கணக்கான திமுகவினரின் ஆசையை நிறைவேற்றியதற்காக...
அண்ணே .... உங்கவழி தனியாவே இருக்கட்டும்ண்ணே....
வெல்க திமுக.... கலைஞர் வழியில் களம் காண்போம்.
1 hr · Public
ADD1
பார்வையாளர்கள்
வெள்ளி, 11 மார்ச், 2016
அப்படியா?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக