உங்கள் பகுதி செய்திகளை உடனடியாக உலகின் பார்வைக்கு அறியவைக்க தொடங்கப்பட்டதுதான் இந்த இதழ்.விரைவாக செய்திகளை அனுப்பி சரியான தீர்வினை பெற்றிட வேண்டுகிறோம்.

Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com - Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com -Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com

புதன், 16 மார்ச், 2016

ஆலோசனைகூட்டம்

பா.ம.க தலைவர் ஜி.கே. மணி அறிக்கை

சென்னையில் நாளை பா.ம.க. மாநில,

 மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம்!

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை (17.03.2016) வியாழக்கிழமை சென்னையில் நடைபெறுகிறது. சென்னை தியாகராயர் நகர் தெற்கு போக் சாலையில் உள்ள முருகன் திருமண அரங்கில் காலையும், மாலையும் இக்கூட்டம் நடைபெறும்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா, முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு கட்சித் தலைவர் ஜி.கே.மணி தலைமையேற்பார். காலை 10.00 மணிக்கு மாநில துணைப் பொதுச்செயலாளர்கள், மாநில துணைத் தலைவர்கள், மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். மாலை 4.00 மணிக்கு ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், மாநகரப் பகுதி, மண்டல செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

From:

Headquarters,

Pattali Makkal Katchi,

Teynampet, Chennai -18.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக