உங்கள் பகுதி செய்திகளை உடனடியாக உலகின் பார்வைக்கு அறியவைக்க தொடங்கப்பட்டதுதான் இந்த இதழ்.விரைவாக செய்திகளை அனுப்பி சரியான தீர்வினை பெற்றிட வேண்டுகிறோம்.

Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com - Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com -Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com

ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

காமெடி கலாட்டா

அதகள இன்டர்வியூ...
அதகள இன்டர்வியூ... ஒரு குட்டிக்கதை!!!
ஒரு மெக்கானிக்கல் எஞ்சினியர் (மெக் மாஸ் என்று அழைக்கப்படுகிறார்) ஐடி நிறுவன இன்டர்வியுக்கு போனா என்ன ஆகும்!!!
பல கட்டங்களைத்தாண்டி அந்த முக்கியமான கட்டம் வந்தது...
மேலாளர் : சரி, எங்க கம்பெனிக்கு வேலைக்கு வரனும்னு நினைக்கிறீங்க.. எல்லாத் தகுதியும் உங்களுக்கு இருக்கு.. இன்னும் ஒன்னு உங்களுக்குத் தெரிஞ்சா உங்களுக்கு வேலை உறுதி...
மெக் மாஸ்: கேளுங்க...
மேலாளர் : உங்களுக்கு எந்தெந்த லாங்குவேஜ் தெரியும்?
மெக் மாஸ் :நான் பாத்தீங்கனா தமிழ்ல கவிதையே எழுதுவேன். சங்கப்பாடல்கள்ல இருந்து பின் நவீனத்துவம் வரைக்கும் அத்துப்படி... அப்பறம் வெள்ளக்காரிக்கு லவ் லெட்டர் எழுதுற அளவுக்கு இங்லீஷ் தெரியும்...
மேலாளர் : அதில்ல.
மெக் மாஸ் : அட இருங்க.. கேப்பக் கஞ்சியில இருந்து கள்ளு வரைக்கும் மோகன்லால்ல இருந்து இருந்து மம்முட்டி படம் வரைக்கும் மலயாளத்துலயே கேக்கவும் பாக்கவும் தெரியும்...
மேலாளர் : ஐயோ அதில்ல...
மெக் : (தோளை குலுக்கியபடி) கம்பெனிக்கு தேவைனா நான் இந்திகூட கத்துக்கிறேன்... பொழப்புக்கு அத கத்துக்கலாம்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க...
மேலாளர் : (கடுப்பாகி) விளையாடறீங்க போல... சீ தெரியுமா?
மெக் : எது தமிழ்ல வர ச்+ஈ=சீ ஆ இல்ல இங்கிலீஷ்ல வர abc c ஆ...
மேலாளர் : (மேலும் கடுப்புடன்) c++ தெரியுமா??
மெக் : இலக்கணப்படி அப்படி சொல்லமுடியாது. ஆனா உங்களுக்கு அப்படித்தான் வேணும்னா சீஈ அப்படினு எழுதலம்னு தொல்காப்பியரே சொல்லியிருக்கார்!!!
மேலாளர் : (மண்டை குழம்ப) தொல்காப்பியரா?? அவர் யாரு??
மெக் : (ஆச்சரியமாக) அவரத் தெரியாதா??? உங்க பாசையில சொல்லனும்னா தமிழுக்கு கோட் எழுதுனவரு...
மேலாளர் : (நக்கலாக) அபாக்கஸ் தெரியுமா? சார்லஸ் பேபேஜ் தெரியுமா??
மெக் : (வியப்பாக) எனக்கு ஆக்டோபஸ் தெரியும்!! இந்த அபாக்கஸ் யாரு??? கேபேஜ் சாப்பிட்டுருக்கேன்... இந்த பேபேஜ் என்ன்??? உங்க கம்பனி கேன்டீன்ல போடுற ஐட்டமா???
மேலாளர் (செம கடுப்பில்) உன்ன எல்லாம் யாரு மேன் உள்ள விட்டது??
மெக் : ஏன்? உங்க கம்பனி செக்யூரிட்டிதான்!!!
மேல் : உன்ன மாதிரி ஒரு திமிர் புடிச்சவன பாத்ததேயில்ல!!
மெக் : யேஏஏய்ய்ய் யாரப்பாத்து என்ன வார்த்த சொன்ன??? நான்தான்டா என் டிபார்ட்மென்ட்லயே சாஃப்டு என் தக்காளி... இன்னும் என் மச்சான் வந்துருக்கனும்... தொல்காப்பியர தெரியாதுனு சொன்னதும் உன் பல்ல பேத்துருப்பான்...
மேல்: கெட் அவுட்! யூ இடியட்!
மெக் : (அலப்பறையாக) யேஏஏய்ய்ய்... எனக்கே கெட் ஆவுட்டா??? மவனே வெளிய வா உன் மூஞ்சியில கூரான் உடறேன்... அப்பறம் அந்த பிஞ்சுபோன மூஞ்ச போட்டோ புடிச்சு உனக்கு வைக்கிறேன்டா கட் அவுட்டு...
மேல் : (அலறியபடி) செக்யூஊஊஊரிட்ட்டீஈஈ
மெக் : உனக்கு மட்டும்தான் ஆளத்தெரியுமா?? இர்ரா நானும் கூப்புடுறேன்.. (அலை பேசியில் கூப்புடுகிறார்) மச்சான் இங்க என்ன அடிக்க ஒருத்தன் ஆளக்கூப்புடுறான்டா... சீக்கிரம் வாங்கடா... நாளைக்கு நம்ம லேப்ல இவன வச்சுதான் drop test பண்ணறோம்...
அதகளமானது இன்டர்வியூ!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக