கூட்டணி முடிவை விஜயகாந்த் மாற்றிக்கொள்ள வேண்டும்: சந்திரகுமார் அணி
தேமுதிகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் சந்திரகுமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, 1980ல் இருந்து மன்றத்தில் இருந்தேன். அத்தனை பேருமே கேப்டனுக்கு விசுவாசியாக இருந்தோம். அதிமுக ஆட்சியில் நெருக்கடி கொடுத்தார்கள். கேப்டனுக்காக செயல்பட்டு வந்தோம். இந்த சூழ்நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் தேமுதிக மட்டும் தான் கடும் பாதிப்படைந்தது. என் மீது வழக்குகள், பார்த்திபன் மீது வழக்குகள். சி.எச்.சேகர் மீது வழக்கு போட்டார்கள். நாங்கள் அனைவரும் அதிமுக அரசால் கடுமையாக பாதிக்கப்பட்டோம். இதேபோல் சாதாரண தேமுதிக தொண்டர்களும் பாதிக்கப்பட்டார்கள். ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த வேண்டுமானால் கோர்ட்டுக்கு சென்றுதான் அனுமதி வாங்க வேண்டும்.
இந்த சூழ்நிலையில் ஜெ.வை ஆட்சியில் இருந்து இறக்க வேண்டும் என்று கேப்டன் கூறி வந்தார். அதற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார் என்றார் கேப்டன். நேர்காணலின்போது 95 சதவிகிதம் பேர் திமுகவில் கூட்டணியில் சேர வேண்டும் என்றனர். நேர்காணலின்போது ஒவ்வொருவரின் கருத்துக்களை கேட்டுவிட்டு தன்னுடைய நிலையை மாற்றியிருக்கிறார்.
கேப்டன் அவர்களே உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என்றோம். அதற்கு அவர் வேட்பு மனுவை வாபஸ் வாங்கும் வரை நாம் கூட்டணி பேசலாம் என்றார். ஆனால் இன்று முழுக்க முழுக்க அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதுபோல் இருக்கிறது. கிட்ட தட்ட 3 மாதமாக திமுக கூட்டணியில் தேமுதிக என்று செய்திகள் வெளியானது. அதற்கு அவர் மவுனமாக இருந்தார். பொறுமையாக இருங்கள். நல்ல முடிவை எடுக்கிறேன் என்றார். மக்கள் நலக் கூட்டணியோடு சேர்ந்து நாம் என்ன ஓட்டு வாங்க முடியும் என்று கேட்ட கேப்டன், இன்று திடீரென அங்கு ஏன் கூட்டணி சேர்ந்தார். அதற்கு என்ன காரணம்.
கடந்த 23ஆம் தேதி திடீரென தேமுதிக அலுவலகத்திற்கு அழைத்தார். அங்கு சென்று பார்த்தபோதுதான் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் இருந்தார்கள். ஒப்பந்தம் செய்தார்கள். மறுநாள் நாங்கள் பொறுப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு கடிதம் கொடுத்தோம். மறுபசீலனை செய்யுங்கள் என்றோம்.
எங்களிடம் கருத்து கேட்காமலேயே மக்கள் நலக் கூட்டணியில் அவர் கூட்டணி அமைத்துவிட்டார். நாங்கள் கட்சியில் இருந்து விலகவில்லை. நாங்கள் சுமந்து வளர்த்த கட்சி தேமுதிக. நாங்கள் மறைமுகமாக பேசினோம். இப்போது கேப்டனிடம் பத்திரிகைகள் மூலமாக கோரிக்கை வைக்கிறோம். கேப்டன் அவர்கள் அவரது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும். இதுவே எங்கள் கோரிக்கை என்றார்.
விஜயகாந்திற்கு நாளை காலை வரை கெடு வைத்தனர் தேமுதிக MLA க்கள்.(திமுக வில் சேர)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக