திமுக தேர்தல் அறிக்கை:மதுவிலக்குக்கு சட்டம்; விவசாயக் கடன் தள்ளுபடி
10 Apr 2016
சென்னை: திமுக தேர்தல் அறிக்கையை அண்ணா அறிவாலாயத்தில் கருணாநிதி வெளியிட்டார். 72 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் க.அன்பழகன், மு.க.ஸ்டாலின், மத்திய முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு, துரைமுருகன், ஆர்.எஸ்.பாராதி, கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், சுப்புலட்சுமி ஜெகதீசன், தங்கம் தென்னரசு ஆகியோர் உடனிருந்தனர்.
தேர்தல் அறிக்கை விவரம்:
1. மதுவிலக்கை அமல்படுத்த சட்டம்
* மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
* மதுவிலக்கு இழப்பை ஈடுகட்ட உரிய திட்டங்கள் கொண்டுவரப்படும்.
* மது விற்பனை செய்யும் டாஸ்மாக் நிறுவனம் கலைக்கப்படும் என அறிவிப்பு.
* டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பு அளிக்கப்படும்..
* மதுவுக்கு அடிமையானோருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடு.
2. விவசாயக் கடன் தள்ளுபடி
* சிறு, குறு விவசாயக் கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்.
* வேளாண்மைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை வெளியிடப்படும்.
* வேளாண் பொருள்களை சந்தைப்படுத்த புதிய கொள்ளை.
* வேளாண் பொருள் உற்பத்தியாளர்கள் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விற்பனை செய்ய வசதி செய்யப்படும்.
* நெல்லுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ. 2,000-ஆக நிர்ணயிக்கப்பட்டு படிப்படியாக ரூ. 2,500-ஆக உயர்த்தப்படும்.
* கரும்புக்கு டன் ஒன்றுக்கு வண்டிச்சத்தம் ரூ. 1,200 சேர்த்து ரூ. 3,500 வழங்கப்படும்.
* நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆய்வு மையம் தொடங்கப்படும்.
* கொடைக்கானலில் தோட்டக்கலை ஆய்வு மையம்.
* ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணி நாள் 150-ஆக அதிகரிப்பு.
* கூடுதலாக சேர்க்கப்படும் 50 நாட்கள் விவசாயப்பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
பழைய ஓய்வூதிய திட்டம்
* அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும்.
* மகளிருக்கு 9 மாதம் பேருகால விடுமுறை அளிக்கப்படும்.
* அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதியக்குழு அமைக்கப்படும்.
* பணிக்காலத்தில் இறக்கும் அரசு பணியாளர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதி அளிக்கப்படும்.
* உயிரிழந்த மக்கள் நல பணியாளர் குடும்பத்துக்கு நிவாரண நிதிதலா ரூ. 5 லட்சம் வழங்கப்படும்.
* 25 ஆண்டுகள் பணி முடித்த அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படும்.
அறிஞர் அண்ணா உணவகம்
* ஏழை மக்களுக்கு வசதிக்காக அறிஞர் அண்ணா உணவகங்கள் அமைக்கப்படும்.
ஆவின் பால் விலை குறைப்பு
* ஆவின் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு 7 ரூபாய் குறைக்கப்படும்.
* கூட்டுறவு பால் உற்பத்தியாளர் உற்பத்தி செய்யும் பால் முழுவதும் ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படும்.
மாதந்தோறும் மின்கட்டணம்
* மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும்.
* விண்ணப்பித்த 15 நாளில் ஸ்மார்ட் கார்டு வடிவில் குடும்ப அட்டைகள் வழக்கப்படும்.
* மாதத்தின் அனைத்து நாட்களிலும் ரேசன் பொருட்கள் வழங்கப்படும்.
வேலைவாய்ப்பு பெருக்கம்
* தனியார் துறைகளில் ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.
* மாவட்டந்தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்.
* அரசுத்துறையில் காலியாக உள்ள 3 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.
* அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 54,233 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.
* பகுதிநேர கணினி பயிற்சியாளர், ஓவிய, இசை ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக