உங்கள் பகுதி செய்திகளை உடனடியாக உலகின் பார்வைக்கு அறியவைக்க தொடங்கப்பட்டதுதான் இந்த இதழ்.விரைவாக செய்திகளை அனுப்பி சரியான தீர்வினை பெற்றிட வேண்டுகிறோம்.

Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com - Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com -Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com

புதன், 1 மார்ச், 2017

சேத்தியாத்தோப்பில் பாமகவினர் டாஸ்மாக்கை முற்றுகையிடபோவதாக எழுந்த தகவலால் போலீஸ்குவிப்பு பரபரப்பு


சேத்தியாத்தோப்பு,மார்ச்.01:

சேத்தியாத்தோப்பு நகரில் பாமகவினர் டாஸ்மாக்கை முற்றுகையிட்டு ஸ்டிக்கர் ஒட்டப்போவதாக எழுந்த தகவலால் போலீசார் குவிக்கப்பட்டனர்.சேத்தியாத்தோப்பு நகரம் உள்ளிட்ட மற்றும் தமிழகம் முழுவதும் நேற்று பாமகவினர் டாஸ்மாக்கடைகளை முற்றுகையிட்டு கடையை மூடக்கோரும் ஸ்டிக்கர் ஒட்டும்போராட்டம் நடத்தப்படும் என்று அந்த கட்சியின் மேலிடத்திலிருந்து நிர்வாகிகளுக்கு உத்தரவு  இடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அக்கட்சியின் நிர்வாகிகள் பலஇடங்களிலும்  டாஸ்மாக்கடை திறக்கும் நேரமாக பகல் 12மணியளவில் தங்கள் பகுதிகளிலிருந்து சென்று இப்போராட்டத்தை நடத்த முடிவுசெய்திருந்தனர்.இதுபோல் சேத்தியாத்தோப்பு நகரில் பாமகவினர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு ஸ்டிக்கர் ஒட்டுவார்கள் என்று அறிந்த காவல் துறையினர், முன்னதாகவே நகரிலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் காலை முதலே  சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி குத்தாலிங்கம் உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளர் வீரமணி தலைமையில்,உதவிஆய்வாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான போலீசாரை குவித்திருந்தனர்.ஆனால்  டாஸ்மாக் கடைதிறந்தது முதல் மாலை வரை பாமகவினர் யாரும்  முற்றுகையிட வரவில்லை.இதனால் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் நிம்மதியடைந்தனர்.இது குறித்து கட்சியினர் வட்டாரத்தில் விசாரித்தபோது எங்களுக்கு போதிய ஸ்டிக்கர் வரவில்லை அதனால் முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தவில்லை என்று தெரிவித்தனர். 

படம்&1
சேத்தியாத்தோப்பில் டாஸ்மாக்கடையை பாமகவினர் முற்றுகையிடப்போவதாக வெளியான தகவலால் வடக்கு மெயின்ரோட்டிலுள்ள ஒரு டாஸ்மாக்கடை நுழைவாயிலில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக