சேத்தியாத்தோப்பு,மே.15:
சேத்தியாத்தோப்பில் உயர்கல்வி விழிப்புணர்வு முகாம் நடத்துவது குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.சேத்தியாத்தோப்பு நகரம், கீரப்பாளையம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி, ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை, சோழத்தரம்,கம்மாபுரம், வடலூர், புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் பனிரெண்டாம் வகுப்பு முடித்துள்ள ஏழை, எளிய மாணவர்கள் தங்களது மேல்படிப்பினை விரும்பிய துறையில் தொடரவும், மற்றும் கல்லூரிகளில் சேருவது குறித்த தெளிவும், மதிப்பெண்களுக்கான தேர்வு அடிப்படையில் இடம் கிடைக்கும் கல்லூரிகள் பற்றிய விவரம் பெற்றிடவும், தாங்கள் தேர்ந்தெடுக்கபோகும் பாடங்களில் உள்ள எதிர்கால வேலைவாய்ப்பு பற்றியும் அவர்களுக்கு புரிந்திடும் வகையில் உயர்கல்வி விழிப்புணர்வு ஆலோசனை முகாம் மாணவர்கள்&அவர்கள் பெற்றோர்கள் கலந்துகொள்ளும் கலந்தாய்வு முகாம் வருகின்ற 27ந்தேதி சேத்தியாத்தோப்பு நகரில் காலை பத்துமணிக்கு ஒரு மண்டபத்தில் நடைபெறுகிறது.இதில் பலதுறை வல்லுநர்கள் கலந்துகொண்டு மாணவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு அளிக்கிறார்கள். இதனை மேற்கானும் பகுதிகளிலுள்ள மேல்நிலைத்தேர்வில் வெற்றிப்பெற்று உயர்கல்விக்கு செல்ல இருக்கும் மாணவர்கள் தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று விவாதிக்கப்பட்டு அழைப்பும் விடுக்கப்பட்டது.முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் தவறாமல் மாணவர்கள் கலந்துகொள்ள வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டது.இந்த ஆலோசனைக்கூட்டத்தில் முன்னாள் தலைமை ஆசிரியர் ராமலிங்கம் தலைமை வகித்தார்.ஓய்வுபெற்ற சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவர் டாக்டர் தயாளன், ஓய்வுபெற்ற தமிழ்க்கல்லூரி பேராசிரியர் அண்ணாதுரை ஆகியோர்முன்னிலை வகித்தனர்.மேலும் நிர்வாகிகள் வேதியியல்த்துறை வணங்காமுடி, சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.டாக்டர் முடிவில் தயாளன் நன்றிகூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக