உங்கள் பகுதி செய்திகளை உடனடியாக உலகின் பார்வைக்கு அறியவைக்க தொடங்கப்பட்டதுதான் இந்த இதழ்.விரைவாக செய்திகளை அனுப்பி சரியான தீர்வினை பெற்றிட வேண்டுகிறோம்.

Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com - Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com -Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com

வெள்ளி, 19 மே, 2017

சேத்தியாத்தோப்பு அருகே டாஸ்மாக்கடை முற்றுகையிட முயற்சி



சேத்தியாத்தோப்பு,மே.19:





சேத்தியாத்தோப்பு அருகே டாஸ்மாக்கடை முற்றுகையிட முயற்சி.சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூர் முரட்டுவாய்க்கால் பகுதியில் புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக்கடை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.பின்னலூர் ஊராட்சியில் தேசிய நெடுஞ்சாலையோரம் ஏற்கெனவே இருந்த மதுக்கடை அகற்றப்பட்டது.இக்கடை அகற்றப்பட்டதிலிருந்து வேறு இடத்தில் கடைவைக்க  டாஸ்மாக் அதிகாரிகள் வேறு இடம் தேடி வந்தனர்.பல இடங்களிலும் கிராமபொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சியினர்  மதுக்கடை வைப்பதற்கு போர்க்கொடி தூக்கிய நிலையில் சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு அருகே சென்னை&கும்பகோணம் நெடுஞ்சாலையோரம், பெட்ரோல்பங்க் பின்புரம் சில நாட்களுக்கு முன்பு புதிய டாஸ்மாக்கடை திறக்கப்பட்டது.இக்கடை திறக்கப்பட்டதிற்கு பின்னலூர், சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு,மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனையடுத்து நேற்று தமிழ்மாநில காங்கிரஸ்கட்சி மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன் தலைமையில், பாட்டாளிமக்கள் கட்சி மாநில துணை செயலாளர் சிட்டிபாபு, பின்னலூர் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் பிரபுதாஸ், தமாக முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் தனலட்சுமி கலைவாணன்,பாமக மணிவேல்,தமாக மணிவண்ணன், முருகன் மற்றும் கிராமமக்கள்  நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பெட்ரோல் பங்க் அருகில் ஒன்று திரண்டு முரட்டுவாய்க்கால் பகுதியில் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக்கடையை முற்றுகையிட முயன்றனர்.அப்போது விரைந்து வந்த சேத்தியாத்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி, சிறப்பு எஸ்எஸ்ஐ அரங்கநாதன்,சேத்தியாத்தோப்பு வருவாய் ஆய்வாளர் ரமேஷ்குமார், விஏஓ மதியழகன்(பொறுப்பு), கிராமஉதவியாளர் அன்புதாஸ் உள்ளிட்டவர்கள் போராட்டக்காரர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு சிதம்பரம் ஆர்டிஓ, புவனகிரி தாசில்தார் ஆகியோர் வந்து டாஸ்மாக்கடை அகற்றுவதாக உறுதிமொழி அளித்தால் மட்டும் போராட்டத்தை வாபஸ்பெறுவோம் என்று கோரிக்கை வைத்து அவ்வாறு வராவிட்டால் கடை அகற்றும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.இதனையடுத்து  பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் உயரதிகாரிகளுடன் பேசினர்.பிறகு சேத்தியாத்தோப்பு வருவாய்ஆய்வாளர் ரமேஷ்குமார், விஏஓ மதியழகன்(பொறுப்பு) ஆகியோர் எழுத்துபூர்வமாக சில தினங்களுக்குள் வேறு இடம் பார்த்து தேர்வு செய்து பிறகு இக்கடை இவ்விடத்திலிருந்து  அகற்றப்படும் என்று உறுதி கடிதம் கொடுத்தனர்.இதற்கு பிறகு போராடத்தினர் சொன்னதுபோல் அகற்றாவிட்டால் எங்கள் போராட்டம் தொடரும் என்று தெரிவித்து கலைந்து சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக