தலைப்புச்செய்திகள்:
ஜெயலலிதா:
இலங்கை சிறைகளில் உள்ள 99 தமிழக மீனவர்களை வெளியுறவு துறை அமைச்சகம் மூலம் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
குலாம் நபி ஆசாத்:
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து காங்.மேலிட பொறுப்பாளர்
குலாம் நபி ஆசாத், தி.மு.க தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் சந்தித்தார்.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர் அளித்தபேட்டி,
*தேர்தல் வியூகங்கள் குறித்து கருணாநிதியுடன் ஆலோசித்தேன்.
*காங். கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என முடிவாகவில்லை.
*எங்கள் கூட்டணியில் மேலும்சில கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு ஆசாத் பேசினார்.
ஸ்டாலின்:
சென்னை: தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் கூறியது, குலாம் நபி ஆசாத்துடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது. ஆசாத் மீண்டும் கருணாநிதியை சந்தித்து இறுதி செய்வார் என்றார்.
பிரேமலதா:
சென்னை: தி.மு.க.,வுடன் எந்தவொரு பேச்சும் நடக்கவில்லை என விஜயகாந்த் மனைவி பிரேமலதா கூறியுள்ளார்.
திமுக., மற்றும் அதிமுக இல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் என்று விஜயகாந்த் கூறியது போல் தற்போது கூட்டணி அமைந்துள்ளது. பா.ஜ., வுடன் பேச்சு எதுவும் நடக்கவில்லை, ஜவடேகருடன் நடந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது. திமுக கூட்டணிக்கு வருமாறு கருணாநிதி அழைத்தமைக்கு நன்றி. இந்த கட்சியுடன் இணையுமாறு அழைப்பு விடுவிக்கப்பட்டதே தவிர பேச்சு வார்த்தை எதுவும் நடக்கவில்லை . இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வைகோ:
மதுரை : தி.மு.க., மற்றும் பா.ஜ., கட்சியினர் பல கோடி தருவதாக விஜயகாந்திடம் பேரம் பேசினர் . ஆனால் அதையெல்லாம் வேண்டாம் என உதறி தள்ளி விட்டு மக்கள் நல கூட்டணியில் விஜயகாந்த் இணைந்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வரும் போது ஜெ., நிலை என்னவாகும் ? 2 ஜி ஸ்பெக்டரம் வழக்கு சிபிஐ., விசாரித்து வருகிறது . சாதிக் என்பவர் ஸ்டாலின் தொடர்பு விசாரிக்கப்பட வேண்டும். சந்தேக மரணம் விசாரிக்கப்பட வேண்டும்.
பொன்.ராதாகிருஷ்ணன் :
தமிழகத்தில் பாஜக துணை இல்லாமல் எந்தக் கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாது. திமுக, அதிமுக கட்சிகள் தனி பெரும்பான்மை கட்சிகள் அல்ல. பாஜகவை நாடி வருபவர்களிடம் கூட்டணி குறித்து பேச்சு நடைபெறுகிறது.
அதிமுக கூட்டணியில் இணைந்ததையடுத்து சரத்குமார் தனது நம்பகத்தன்மையை நிரூபித்து காட்டியுள்ளார்
ராமதாஸ் :
இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் 96 பேரையும் உடனடியாக விடுதலை செய்யவும், பறிமுதல் செய்யப்பட்ட 82 படகுகளை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குஷ்பூ:
இந்தியாவை சுதந்திர இந்தியாவாக மக்களுக்கு கொடுத்தது காங்கிரஸ் கட்சிதான் என்று குறிப்பிட்டார். மக்களுக்காக எந்த ஒரு திட்டங்களையும் முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தவில்லை என்றும், டாஸ்மாக் மூலம் தமிழக மக்களை வீணடித்துவிட்டார் என்றும் கூறினார். கேரளாவில் பூரண மதுவிலக்கு சாத்தியமாக இருக்கும் போது, தமிழகத்தில் ஏன் சாத்தியம் இல்லை எனவும் குஷ்பூ கேள்வி எழுப்பினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக