உங்கள் பகுதி செய்திகளை உடனடியாக உலகின் பார்வைக்கு அறியவைக்க தொடங்கப்பட்டதுதான் இந்த இதழ்.விரைவாக செய்திகளை அனுப்பி சரியான தீர்வினை பெற்றிட வேண்டுகிறோம்.

Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com - Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com -Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com

திங்கள், 28 மார்ச், 2016

இதுதான் உலகம்

பசியால் எனக்கு
வயிறெரிந்து கொண்டிருக்கிறது???
உயர்ரக உணவு விடுதியில்
ஒரு இட்லிக்கு எழுபத்தைந்து ரூபாய்
கொடுத்துவிட்டு
சங்கடமின்றிச் சாப்பிட்டுக்கொண்
டிருக்கிறார்கள்!!!!
இலவச அரிசிக்காக
இக்கோடை வெயிலில்
ரேசன் கடை வாசலில்
க்யூவில் காத்திருக்கிறாள் என் அம்மா
பெருகிவிட்ட ஆடி கார்களுக்கும்
வோல்க்ஸ்வேகன் கார்களுக்கும்
விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு
சாலை அகலமாக்கப்படுகி
றது....
தன் துருப்பிடித்த சைக்கிள் ரிம்மை
இம்முறை எப்படியும் மாற்றிவிடவேண்டுமென
எள்ளுக்காய் விளைச்சலை
நம்பிக்கையோடு பார்த்துக்கொண்டி
ருக்கிறார்
என் அப்பா...
ஒரே ஒரு வங்கியில்
பத்தாயிரம் ரூபாய் மட்டுமே
கடன் வாங்கிய
பக்கத்துக் காட்டு விவசாயி
வங்கியின் மிரட்டல் தாளாது
பால்டாயில் குடித்து தற்கொலை...
ஒன்பதாயிரம் கோடி ஏமாற்றிவிட்டு
ஒருவன் சாவகாசமாய்
வெளிநாடு பயணம்???
பந்தைப் பார்த்து அடிப்பவனுக்கு
ஏலத்தில் ஏழு கோடி!!!
குடும்பமே வியர்வையூற்றி விளைவித்த
உணவுப்பொருள்
விலைபோகாது முளைவிட்டபடி
கட்டப்பட்ட சாக்குகளில் கேட்பாரற்று
கால்பந்து விளையாட
நான்கு இலட்சம் ரூபாய்க்கு
ஷூ அறிமுகம்....
வெயில் தாங்காது
முட்களேறியேறி ஆணிவிழுந்த பாதங்களோடு
ஆடுகளுக்குப் பின்னே ஓடிக்கொண்டிருக்கும்
என் சக கிராமத்தான்!!!!!
கோடிகளில் ஊழல் செய்தவர்கள்
கோலோச்சும் அதிகாரத்தில்
விளைவித்துக் கொடுப்பவனோ
அதல பாதாளத்தில்????
ஒரு இலட்சம் செலவில்
ஒரு சாலையோர விளம்பரம்
நாட்டின் எல்லாச் சாலைகளிலும்
ஆடைகளற்ற அந்த அம்மணச் சிறுவன்
வாசித்துச் சொல்கிறான்
தன் தந்தைக்கு
இந்த ஞாயிறு விடுமுறையில்
இந்தியனாயிருப்பதில் பெருமை கொள்
நல்ல பெருமைடா......
ஆஸ்திரேலியாவை செய்ததாம்
அரசியலில் தோற்றதாம்
அட போங்கப்பா நீங்களும்,உங்க விளையாட்டு அரசியலும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக