உங்கள் பகுதி செய்திகளை உடனடியாக உலகின் பார்வைக்கு அறியவைக்க தொடங்கப்பட்டதுதான் இந்த இதழ்.விரைவாக செய்திகளை அனுப்பி சரியான தீர்வினை பெற்றிட வேண்டுகிறோம்.

Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com - Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com -Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com

புதன், 16 மார்ச், 2016

அதிரடி சோதனை

உரிய ஆவணங்கள் இல்லாத பணம் ரூ. 7.40 கோடி பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை அதிரடி

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாள் முதல், மார்ச் 12 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரொக்கப் பணம் ரூ. 7 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்தி குறிப்பு:

தமிழகத்தில் மே மாதம் 16 ஆம் தேதி சட்டப் பேரவை பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் நன்னடத்தை விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி மார்ச் 12 ஆம் தேதியன்று உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில் பல்வேறு மாவட்டங்களில் பறக்கும் படையினரால் ரூ.11,04,900ம் மற்றும் 78,300 மி.லி மதுவகைகள், 27 நைலான் புடவைகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் இராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.1.50 லட்சமும், சேலம் மாநகரில் ரூ.1,10 லட்சமும், கிருஷ்ணகிரியில் 7.84 லட்சமும், விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.60,900ம், திருவண்ணாமலையில் 27 நைலான் புடவைகள், மதுரை, திருவாரூர் நெல்லை மாவட்டம் மற்றும் மதுரை மாநகரில் மதுவகைகளும் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.

தேர்தல் விதிமுறைகளை மீறி உரிய அனுமதி பெறாமல் கோயமுத்தூர், மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அமைத்த கட்சி கொடிகள், பேனர்கள், கொடிகம்பங்கள் மற்றும் அனுமதி பெறாமல் சுவர்களில் எழுதிய வாசகங்கள், சாலை ஓரங்களில் கொடிகம்பங்கள் வைக்க குழிகள் தோண்டியது போன்ற காரணங்களால் பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டன.

நிலையான கண்காணிப்பு குழுவின் சோதனையின் போது, தஞ்சாவூரில் ரூ.50,000 மதிப்புள்ள பித்தளை, வெள்ளி பாத்திரங்கள், திருச்சியில் ரூ.1,19,320ம், விழுப்புரத்தில் ரூ.67,000ம், திருப்பூரில் ரூ.2.38 லட்சம் உட்பட மொத்தம் ரூ.4,24,320 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

தேர்தல் விதிமுறைகளின்படி மார்ச் 12 ஆம் தேதி வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.2,00,88,620ம் ரொக்கம் பறக்கும் படையினராலும், ரூ.5,01,71,285ம் நிலையான கண்காணிப்புக் குழுவினராலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக