உங்கள் பகுதி செய்திகளை உடனடியாக உலகின் பார்வைக்கு அறியவைக்க தொடங்கப்பட்டதுதான் இந்த இதழ்.விரைவாக செய்திகளை அனுப்பி சரியான தீர்வினை பெற்றிட வேண்டுகிறோம்.

Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com - Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com -Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com

புதன், 16 மார்ச், 2016

சேத்தியாத்தோப்பு அருகே வீராணம் ஏரியை அறைகுறையாக தூர்வாருவதாக குற்றச்சாட்டு



சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது வீராணம் ஏரி.இந்த ஏரியானது 18 கிமீ நீளம் கொண்டது.ஆனால் அகலம் என்பது தற்போது சுருங்கிபோய் உள்ளதால் சரியான அளவில் தெரியவில்லை.சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வீராணம் ஏரி 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி கொண்ட ஏரியாக உள்ளது.இதில் நீண்டகாலமாக தண்ணீர் தேக்கி வைக்கும் அளவு  குறைந்து வந்ததால் விவசாயிகள் மற்றும் குடிநீருக்காக மக்கள் பெரிதும் கவலை அடைந்து வந்தனர்.படிப்படியாக  ஏரியின்  தணணீர் தேக்கும் நீர் மட்டம் குறைந்து வருவதால் எதிர்காலத்தில் இப்பகுதிகள் பாலை வனமாக மாறி விடுமோ எனும் அஞ்சும்படியாக  இருந்தது.இதனை விரைவாக தூர்வாரி செப்பணிட வேண்டும் என்று விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.இதற்கடுத்து ஆளும் தமிழக அரசானது சில ஆண்டுகளுக்கு முன்பு வீராணம் ஏரி தூர் வாருவதற்கு என்று மிகபெரும் தொகையை ஒதுக்கியது.ஆனால் அப்போது இந்த தொகையை அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலரும்  கூட்டணி அமைத்துகொண்டு பங்குபோட்டுக்கொண்டதால் அப்படியே கிடப்பில்போடப்பட்டது.இதனால் விவசாயிகள் உள்ளிட்ட பலரும் அதிர்ச்சியடைந்தனர்.ஆனாலும் இவர்கள் விடாமல்போராடியதின் விளைவாக அரசு தற்போது தனது ஆட்சி முடிவுறும் தருவாயில் வீராணம் ஏரியை தூர்வார ரூ 40 கோடியை ஒதுக்கியது. இதன்படி வீராணம் ஏரி தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இதுபற்றி கருதது கூறிய இப்பகுதி மக்களும், விவசாயிகளும் தூர்வாரும் பணியை  மேற்கொள்பவர்கள் முழுமையாக தூர்வார வேண்டும்.அரைகுறையாக தூர் வாரகூடாது.சரியான ஆழழத்தில்தூர் வாரினால்தான் ஏரியில் அதிகப்படியான தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.இது நீண்டகாலத்திற்கு விவசாயத்திறிகும் , பொதுமக்களுக்கும் பயன்தரக்கூடியதாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக