"முதலமைச்சர் வேட்பாளர்: அது வேற வாய் - இது நார வாய்!"
--------------------------------------
தலித் ஒருவரை முதலமைச்சராக அறிவிக்க வேண்டும் என்று கேட்டபோது - முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது. ஜனாதிபதி தேர்தல் முறையை தமிழ்நாட்டில் திணிக்கலாமா? - என்றேல்லாம் உதார் விட்டது வைகோ + கொம்யூனிச கும்பல்.
இப்போது நாயுடு சமூகத்தைச் சேர்ந்த விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துள்ளனர். தலித் ஒருவருக்காக பேசப்பட்ட கொள்கைக் கோட்பாடுகள் எல்லாம் தலித் அல்லாதவருக்கு பொருந்தாதா?
--------------------------------------
"அது வேற வாய்: முதலமைச்சர் வேட்பாளர் பேச்சுக்கே இடமில்லை "
--------------------------------------
மக்கள் நலக் கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அறிவித்தார் வைகோ.
அவரது "முதல்வர் வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை" பேச்சின் காணொலி இதோ:
https://www.facebook.com/812418062202043/videos/825433987567117/
"இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மற்றும் தேர்தல் சட்டங்களில், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை தேர்வு செய்யும் விதிமுறைகளே உள்ளன. மக்களால் தேர்வு செய்யப்பட்ட, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் சேர்ந்து, பிரதமர், முதல்வரை தேர்வு செய்வது தான், இந்திய தேர்தல் முறை. இதிலிருந்து வேறுபட்டு, தனி நபரை முன்னிறுத்தி, அமெரிக்க தேர்தல் முறை போல, இந்திய தேர்தல் முறையை மாற்ற முயற்சிக்கின்றனர். இது, இந்திய ஜனநாயகத்துக்கு விரோதமானது. இப்படிப்பட்ட தேர்தல், தனிமனித சர்வாதிகாரத்தை, மேலோங்க செய்யுமே தவிர, மக்களால் உருவாக்கப்படும் உண்மையான குடியரசாக இருக்காது." என்று அறிவித்தார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மகேந்திரன்.
http://www.dinamalar.com/news_detail.asp?id=1447742
--------------------------------------
"இது நார வாய்: விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளர்"
--------------------------------------
மநகூவின் முதலமைச்சர் வேட்பாளர் விஜயகாந்த் என வைகோ, ராமகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் கூட்டாக அறிவிப்பு!
Arul Rathinam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக