குட்டி ராஜேஷ்
அம்மையார் ஜெயலலிதாவின் பல சாதனைகளை நீங்கள் கேள்விப்பட்டிரு
ப்பீர்கள்.... ஆனால் யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் முறியடிக்க முடியாத சில அபூர்வமான சாதனைகள் இங்கே உங்கள் பார்வைக்காக.....
1) ஆதீனத்தைக் கூட அடிமையாக மாற்றியது...
2) புதிய தலைமுறை,📺 தந்திடிவி 📺 என ஜெயா டிவிக்கு இரண்டு பிராஞ்ச் சேனல்கள் தொடங்கியது...
3) நாட்டிலேயே அதிக அளவில் தமிழகத்தில் ஹெலிபேடுகளை🚁 உருவாக்கியது.....
4) காவல்துறையின் உதவியுடன் குடிமகன்களை நிம்மதியாக குடிக்க வைத்தது...,
5) பிரச்சாரத்தில் 📢 இரட்டை மேடை முறையை உருவாக்கி நவீன தீண்டாமையை ஊக்குவித்தது.....
6) கடும் மழை⛈⛈ வெள்ள நேரத்திலும் கூட பல்வேறு சைஸ்களில் அம்மையாரின் படத்தை ஸ்டிக்கராக அச்சடித்து ஒரு இடம் விடாமல் ஒட்டியது....
7) 1000 கோடி ரூபாயில் பீனிக்ஸ் மால் திரையரங்குகளை வாங்கியது....,
8) அதிக முறை உச்சநீதி மன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் குட்டு வாங்கியது.....
9) கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை வரை செல்லும் படகுகளை, அங்கிருந்து கூப்பிடும் தூரத்தில் உள்ள வள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைக்கு செல்லாமல் தடுத்தது....
10) பறக்கும் குதிரை எனும் புதிய உயிரினத்தைக் கண்டு பிடித்து அதற்கு மெரினாவில் சிலை வைத்தது..
11) அமாவாசைக்கு🌑🌑 அமாவாசை மந்திரிகளை தூக்கிப் போட்டு பந்தாடியது...
12) ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகமான அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகத்தை பஜன்லால் சேட்டு வீட்டுக் கல்யாணத்துக்கு வாடகைக்கு விட்டது.....
13) பழைய கட்டிடங்களுக்கெல்லாம் புதிய வர்ணம் பூசி அதைக் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தது..
14) 110 விதியின் கீழ் 250 வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு தான் ஒரு வெற்று வேட்டு என காட்டிக் கொண்டது.....
15) இரவோடு இரவாக சொல்லாமல் கொள்ளாமல் செம்பரப்பாக்கம் ஏரியைத் திறந்து விட்டு தலைநகர் மக்களின் உயிரையும், உடைமைகளையும் பறித்தது..... 16) முதல்வராக இருக்கும் போதே கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் ஏறக்குறைய ஒரு மாதம் தவ வாழ்வு வாழ்ந்தது......
17) ஒரே ஆட்சியில் இரண்டு முதல்வல்கள் என்ற புதிய சிஸ்டத்தை உருவாக்கி, ஓ.பி.எஸ்ஸை கொஞ்ச காலத்திற்கு முதல்வராக இருக்க வைத்தது.....
18) கூட்டல் கழித்தல் கணக்குகளை மிகத் துல்லியமாகக் கணக்கிட குமாரசாமி கால்குலேட்டர் என்ற புதிய வகை கால்குலேட்டரை📱 உலகிற்கே அறிமுகப்படுத்தியது....
19) புதிய தலைமைச் செயலகம் தரமானதாக இல்லை என்று கூறி தமிழக சட்டசபையை பழைய இடத்திற்கே மாற்றி விட்டு, அந்த புதிய தரமற்ற தலைமைச் செயலகத்தை சிறப்பு மருத்துவமனையாக மாற்றிய அதிபுத்திசாலித்
தனம்...
20) நடிகர் கமலஹாசனை நான் இந்த நாட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை எனக் கூற வைத்தது......
21) தேமுதிக MLA விலைக்கு வாங்கியது.
23) தைராய்டு-ஆல் பாதிக்கப்பட்டு தெளிவாக பேச முடியாமல் இருக்கும் விஜயகாந்தை முழு நேர குடிகாரன் என்று பொய்யை கிளப்பிவிட்டது...
அடடா எத்தனை சாதனைகள், ஒவ்வொன்றும் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டியவை....!!!
ADD1
பார்வையாளர்கள்
சனி, 23 ஏப்ரல், 2016
ஜெவின் முரண்பாடுகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக