உங்கள் பகுதி செய்திகளை உடனடியாக உலகின் பார்வைக்கு அறியவைக்க தொடங்கப்பட்டதுதான் இந்த இதழ்.விரைவாக செய்திகளை அனுப்பி சரியான தீர்வினை பெற்றிட வேண்டுகிறோம்.

Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com - Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com -Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com

சனி, 23 ஏப்ரல், 2016

சீமான் பேச்சு

தூய அரசியல் மாற்றம் கொண்டு வர இளைஞர்கள் முன் வரவேண்டும் - சீமான் பேச்சு

தமிழகத்தில் ஊழலற்ற, நேர்மையான , தூய அரசியல் மாற்றம் கொண்டு வருவதற்கு இன்றை இளைஞர்கள் முன் வர வேண்டும் என்று கோவில்பட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கடசி சார்பில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அருண்குமாரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து பேசினார். கோவில்பட்டி காமராஜர் சிலை அருகே நடைபெற்ற இந்த பிரச்சாரக்கூட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட செயலாளர் புங்கன், மாவட்ட இளைஞரணி செயலாளர் தியாகராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் கலந்து கொண்டு சீமான் பேசுகையில் திமுக, அதிமுக அரசுகள் மக்களுக்கு இலவசங்களை கொடுத்து , அவர்களை பிச்சைக்காரர்களாக மாற்றியது மட்டுமே அக்கட்சிகளின் சாதனை, மக்களின் வாழ்வாதர உயர்விற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, மக்களின் அடிப்படை தேவைகளான கல்வி, மருத்துவம், குடிதண்ணீர் இவை இன்றைக்கு விலை கொடுத்தும் வாங்கும் நிலைமை, நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரும் போது கல்வி, மருத்துவம், குடிதண்ணீர் அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவசமாக வழங்கப்படும், மாறி,மாறி ஆட்சிபுரிந்த இந்த கட்சிகள், ஆறு, குளம், குட்டைகளை சரிவர பாரமரிப்பு செய்யாத காரணத்தினால் தான் 2500 டி.எம்.சி.தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. வெறும் 403 டி.எம்.சி. தண்ணீர்க்காக அண்டை மாநிலங்களுடன் சண்டை  போடும் அவல நிலைமை, மேலும் ஹோண்டாய், கோக்,பெப்சி போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு இலவசமாக தண்ணீர் தரப்படும் அவலமும் உள்ளது. குறிப்பாக கோக்,பெப்சி நிறுவனங்களுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து 803 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வரும் போது இவை முறைப்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு போதிய குடிதண்ணீர் இலவசமாக வழங்கப்படும், பசுமை புரட்சி என்ற பெயரில் நமது விவசாயத்தினை அழித்து விட்டனர். எனவே தான் விவசாயம் பெருக வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் விவசாயத்தினை தேசிய தொழிலாளாக அறிவித்து, படித்த, படிக்காதவர்களுக்கு விவசாயத்தில் அரசு வேலை தருவது மட்டுமின்றி, புறம்போக்கு நிலங்களை மேய்சல் மற்றும் பண்ணைகளாக மாற்றுவோம், தொடக்க கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசமாக தருவது மட்டுமின்றி மத்தியரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் மாநில ஆசிரியர்களுக்கும் தரப்படும், வெண்மை புரட்சி என்ற பெயரில் நமது நாட்டு மாடு வகைகளை அழித்து வருவது மட்டுமின்றி, ஜல்லிக்கட்டுக்கு தடை என்ற பெயரில் அந்த இனத்தினை முற்றிலுமாக அழிக்க முயற்சி நடைபெற்று வருகிறது. இன்றைக்கு டென்மார்க், பிரேசில், க்யூபா போன்ற பல்வேறு நாடுகளில் கால் நடை வளர்ப்பு, விவசாயம் ஆகியவற்றினால் அந்த நாடுகள் முன்னேறியுள்ளது. ஆனால் எல்லா வசதியும், வளமும் இருந்தும் நாம் நாடு கடன் வாங்கும் நிலையில் தான் உள்ளது. இதனை மாற்ற வேண்டும், மாற்றம் என்பது கூட்டணி, கட்சி மாற்றம் இல்லை நாங்கள் சொல்வது அரசியல் மாற்றம், அதற்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும், தங்கள் வாக்குகளை காசுக்கு விற்க கூடாது, காசு வாங்கி கொண்டு வாக்கு அளிப்பது தேச தூரோகத்திற்கு சமம், ஊழல் இல்லாத, தூய அரசியல் மாற்றித்தினை கொண்டு வர இன்றை இளைஞர்கள் முன் வரவேண்டும் என்றார். இதில் மாவட்ட தலைவர் ராஜேஸ், நகர செயலாளர் தங்கமாரியப்பன், தூத்துக்குடி மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் தமிழ்செல்வன், வீரத்தமிழர் முன்னணி மாவட்டச் செயலாளர் மகேஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக