😀😀😀சிரிப்பு வருது 😀😀😀😀சிரிப்பு வருது 😀😀😀
தேர்தல் கவுண்டன் நிகழ்ச்சிக்கு உங்களை வரவேற்கிறேன்.
10))))நம்ம கவுண்டவுனில் பத்தாவது இடம் காலியாக இருந்ததால்!
யாருக்காவது கொடுக்க வேண்டுமே என தேடி அலைந்தபோது!!
நம்ம கவுண்டவுனின் புதிய வரவாக மிகப்பெரிய ஆக்சன் திரைப்படமான ""யார் தமிழர் " திரைப்படம் இடம்பெறுகிறது.
படம் என்னவோஆக்சன் திரைப்படமாக அறிவிக்கப்பட்டாலும்
படம் பார்ப்போர் பெரிய காமெடி படமாகவே பார்கின்றனர்
படம் முழுக்க வசனம் மட்டுமே இடம்பெறுவதால் முகச்சுழிப்பை ஏற்படுத்துகிறது.
குறிப்பு ::இப்படம் பார்க்க தமிழர்களுக்கு மட்டுமே டிக்கெட் கொடுக்கப்படுகிறது.
யார் தமிழன்? கே ள்விக்குறியே!!!!
9)))) ஒன்பதாவது இடத்தில்
கார்த்திக் மட்டும் நடிக்கும் "நடாளும் கட்சி"
படம் பார்த்து விமர்ச்சிப்பதற்கு எந்த தியேட்டரில் ஓடுவது என தெரியாததால்
விமர்ச்சனம் வரும் நாட்களில்!!!
8)))சரத் நடிக்கும் "சமத்துவம்" திரைப்படம்
ஆரம்பத்தில் பெரிய அவதாரமாக தன்னை காட்டி கொள்ளும் நாயகன்!!
திடீரென நாயகியின் அடியாட்களில் ஒருவராக சேர்ந்து விடுவதால்
கதையில் உப்பு சப்பு புளிப்பு துவர்ப்பு என எதுவும்மின்றி முடிகிறது.
7))))ஏழாவது இடத்தில்
தொடர்ந்து ஒரே இடத்தில் கிருஷ்னசாமியின் "தமிழகம்""
படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமில்லாவிட்டாலும்
கதாநாயகனே அனைத்து பாத்திரத்தையும் ஏற்க நினைப்பது சற்று ஏமாற்றத்தை அளிக்கிறது.
6))))ஆறாவது இடத்தில்
ரீமேக் படமான வாசன் நடிக்கும் "தமகா""
கதையின் நாயகனுக்கு எத்தனையோ பிரச்சனை யிருந்தாலும்
தகப்பனுடைய "சைக்கி ளை" மீட்பதுதான் பெரிய லட்சியமாக கொண்டிருப்பது.
படத்திற்கு மைனஸ் பாயின்ட்
5)))ஐந்தாவது இடத்தில்
மோடி என்கிற பெரிய கதாநாயகனை கொண்ட"" BJP"
கடைசிவரை நயகனை காட்டாமலே கதை நகருகிறது.
நாயகியே பிரதானமாக இருப்பதாலும்
படம் திரையிட தியட்டர் இல்லாமல் இருக்கிறது.
பெரும்பாலும் மாம்பழபடத்துடன் திரையிடவே வாய்ப்பிருக்கிறது
4))))நான்காவது இடத்தில்
அன்பு மணி நாயகனாக நடிக்கும்"மாம்பழம்"
மாம்பழ வியாபரியான நாயகன்
தனது எதிரிகளை சண்டைக்கு அழைப்பதே கதை.
கடைசி வரை யாரும் சண்டைக்கு வராததால் நாயகன் விரக்தியடைவதாக கதை நகருகிறது.
கடைசியில் மாம்பழம் விற்றாரா??
யாராவது அவருடன் சண்டையிட்டனரா???
என்பதே மீதி கதை
3)))மூன்றாவது இடத்தில்
பலகதாநாயகர்களை கொண்ட படம்
"கே.கூ" (கேப்டன் கூட்டனி)
படம் கி.பி2080 யை நோக்கி செல்கிறது.
எதிர்கால டெக்கினிக்கான பறக்கும் விமானத்தில் நாயகன் ஏறுவதும்
பறக்கும் போதே இன்ஜினை மாற்றுவதும்
காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.
மொத்தத்தில் ஆங்கிலபடத்துக்கு இணையான கற்பனை காவியம்
2 இரண்டாவது இடத்தில்
இரண்டு நாயகர்களை கொண்ட "நமக்கு நாமே"
பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் பழைய கதையையே கொண்டுள்ளதால் சற்று பின்னடைவே உருவாக்கியுள்ளது.
அதிக விமர்ச்சனத்தை இப்படம் பெற்றுவிட்டதால்
அடுத்து முதலிடத்தில் உள்ள படம்
"ஜெ.ஜெ"
இப்படம் கதாநாயகியின் ரசிகர்களாலே முதல் இடத்தை தக்க வைத்து இருக்கிறது.
இப்படம் பார்க்க செல்லும் அனைவருக்கும் நாயகியின் சார்பாக பணம் கொடுத்து பார்க்க வைக்க இருப்பதும் முதலிடத்துக்கு காரணம் எனலாம்
ஆனாலும்
பார்த்த படத்தையே ரசிகர்கள் பார்ப்பார்களா இல்லை மாறுவார்களா என்பதை பொறுத்தே முதலிடம் இருக்கிறது.
கதாநாயகி அணையை திடீரெனத் திறந்துவிட்டு மக்களை மூழ்கடித்துவிட்டு..
அவர்களை காப்பாற்றுவது போல் சீன் போடுவது... புதுமையான டெக்னிக்...
நன்றி வணக்கம்.
Siva .G 🙏🏼
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக