உங்கள் பகுதி செய்திகளை உடனடியாக உலகின் பார்வைக்கு அறியவைக்க தொடங்கப்பட்டதுதான் இந்த இதழ்.விரைவாக செய்திகளை அனுப்பி சரியான தீர்வினை பெற்றிட வேண்டுகிறோம்.

Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com - Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com -Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com

சனி, 30 ஏப்ரல், 2016

கோவில்பட்டி 'வைகோ...!'- காரணம் சொல்கிறார்....

தமிழகத்தில் மக்கள் நல கூட்டணி என்ற ஒன்றை ஆரம்பித்து வைகோ நடத்தும்
நாடகங்கள் இருக்கிறதே அப்பப்பா....எந்த மனிதரும் நடிக்காத
பாத்திரங்களையெல்லாம் நடித்து தமிழக மக்களை முட்டாளாக நினைக்கிறார் என்று
பலரும் கொதித்துபோய் கூறுகிறார்கள். மாற்றம் வேண்டும்.தமிழகத்தில்
திராவிடக்கட்சிகளிடத்திலிருந்து மாற்றம் வேண்டும் என்று சொல்லி அவர்
இரண்டு கம்னியூஸ்ட்டுகள், விசிக திருமா, கடைசியாக விஜயகாந்த், தமிழ்மாநில
காங்கிரஸ் வாசன் அனைவரையும் இணைத்து மக்கள் நல கூட்டணி என்ற தேர்தல்
ரயிலை ஓட்டிக்கொண்டுள்ளார்.இந்த தேர்தல் கால சிறப்பு ரயிலில் எல்லா
பெட்டிகளும் நன்றாக இருந்தாலும் அனைவரையும் ஒருங்கிணைக்கும் என்ஜின்
பெட்டி மட்டும் தான் பயணிக்கவேண்டிய பாதையை விட்டு விலகிபோய்விட்டது என
மக்கள் கருத்து கூறுகிறார்கள்.முதலில் தேமுதிக வருவதற்கு முன்பு இருந்த
மக்கள்நல கூட்டணியில் அதுப்பற்றிய ஆர்வம் மக்களிடத்தில் இருந்தாலும்,
என்றைக்கு கூட்டணிக்குள் தேமுதிக வந்ததோ அப்போதே மக்கள்
நலக்கூட்டணியின்மேல் இருந்த மக்களின் ஆர்வம் சுத்தமாக குறைந்து
போய்விட்டது எனலாம்.கூட்டணியின் கொள்கையையே விஜயகாந்திற்காக வளைத்து
அவருக்கு முதல்வர்வேட்பாளர் என்ற தனி அந்தஸ்தை கொடுத்ததிலிருந்தே வைகோ
மக்கள் நலக்கூட்டணியை தவறான வழிக்கு கொண்டுபோகிறார் என கூட்டணியில்
இருந்த மற்ற கட்சியினர் வைகோ காதுபடவே சொன்னார்கள்.

இதை வைகோ சுத்தமாக கேட்கவில்லை.பிறகு கூட்டணிக்குள் இருந்த
கம்னியூஸ்ட்டுக்கள், விசிக திருமா போன்றவர்கள் மவுனமாகவே அவர்களுக்குள்
இன்னும் என்னென்னகூத்தையெல்லதம் செய்யப்போகிறாரோ இந்த மனுசன் என்று
அமைதிகாத்தனர்.காரணம் மக்கள் நலகூட்டணியானது உருவாகும்போதே பலரின்
கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானது.இது இன்னமும் எத்தனை நாளைக்கு தாக்கு
பிடிக்குமோ என்று சொன்னவர்கள் ஆயிரம்பேர்.அப்படியாக உள்ள நிலையில் மக்கள்
நல கூட்டணியில் எது நடந்தாலும் கூட்டணியின் தர்மம்மீறாமல் மற்றவர்கள்
அமைதிகாக்கவேண்டும் என்று இருக்கிறார்கள்.கூட்டணிக்குள் ஏதேனும் கலகம்
வந்து பிரிந்துபோனர்ல் மற்றவர்கள் சொன்னது உண்மையாகிவிடும் அல்லவா என்பதை
அறிந்து அவர்கள் அவ்வாறு இருந்தார்கள்.


இதற்கிடையில் கூட்டணிக்கு வந்த முதல்வர் வேட்பாளர்
விஜயகாந்தை வைத்து ஏகப்பட்ட விமர்சனங்கள்.ஒருப்பக்கம் தேமுதிக
கூட்டணிக்குள் இருந்தாலும் தனி அணியாக செயல்பட்டு வருகிறது.இது போதாது
என்று தேமுதிக சுதிஷ் தேமுதிக& மக்கள் நலக்கூட்டணிக்குள்
இருப்பவர்களுக்கு தமிழகத்தில் ஆட்சி அமைத்துவிட்டதைபோல தனி அமைச்சரவை
பதவியை அறிவித்து கிலியை ஏற்படுத்தினார்.இது மற்ற அரசியல் கட்சியினருக்கு
வெறும் வாயில் அவல் மெல்வதுபோல இருந்தது. கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர்
வைகோ பல சேட்டைகளையும் செய்துவந்தார். இவரைப்பபற்றி வைத்த விமர்சனங்களை
ஏற்றுக்கொள்ள துணிவில்லாமல் அவ்வப்போது தான் என்ன பேசுகிறோம், எதை
பேசுகிறோம் என்று தெரியாமலேயே பேசிக்கொண்டிருக்கிறார் இன்னமும்.மக்கள் நல
கூட்டணியில் உள்ள இரண்டு கம்னியூஸ்ட்டு தலைவர்களும் தாங்கள்
தேர்தலில்போட்டியிடுவதில்லை. என்று அறிவித்தார்கள்.இவர்களைப்போலவே
கூட்டணிக்கு இறுதியாக வந்த ஜிகே வாசனும் தேர்தலில்போட்டியிடப்போவதில்லை
என்று கூறிவிட்டார்.ஆனால் ஒருங்கிணைப்பாளர் வைகோ தனக்கு கோவில்பட்டி
தொகுதியில் போட்டியிடபோவதாக கூறி அந்ததொகுதியை வலுக்கட்டாயமாக
கேட்டுபெற்றார்.ஆனால் கடைசியில் நடந்ததே வேறு.வேட்பு மனுதாக்கல் செய்ய
சென்ற வைகோ திடிரென்று தான்போட்டியிடப்போவதில்லை என்றும் தனக்கு பதில்
தங்கள்கட்சியின் வேறு வேட்பாளர் போட்டியிடுவார் என்று அறிவித்து
ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கே நகைச்சுவை நடிகரானார்.கோவில்
பட்டிதொகுதியில் தான் போட்டியிடாததற்கு அவர்கூறும் காரணங்களை பாருங்கள்.

கோவில் பட்டி விலகல் விளக்கம்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள நீண்ட விளக்க அறிக்கையில், மறுமலர்ச்சி
திராவிட முன்னேற்றக் கழகத்தின்
என் உயிரான கண்மணிகளுக்கும், தேசிய முற்போக்கு திராவிட கழகம், மக்கள்
நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய
கட்சிகளின் தலைவர்களுக்கும், அக்கட்சிகளின் தோழர்களுக்கும், தமிழ்
மாநிலக் காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கும், அக்கட்சியின்
தொண்டர்களுக்கும்,

தமிழக வாக்காளப் பெருமக்கள், பொதுமக்கள், ஊடகங்களின் செய்தியாளர்கள்,
தொலைக்காட்சிகளின் ஒளிப்பதிவாளர்களுக்கும், கோவில்பட்டி சட்டமன்றத்
தொகுதியில் நான் வேட்பாளராகப் போட்டியிடவில்லை என்பதைத் தெரிவித்துக்
கொள்கின்றேன்.

நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில், தமிழகத்தில் பலநூறு ஆண்டுகளாக
ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்ற சமூகங்களுக்கு இடையில் பகையையும்,
வெறுப்பையும் நெருப்பாக மூட்டி, அதன் வெப்பத்தில் குளிர் காய்ந்து தங்களை
நிலைப்படுத்திக் கொள்ளத் தமிழ்நாட்டின் பல இடங்களில் பலர்
முயல்கிறார்கள். நாம் 50 ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் சென்று கொண்டு
இருக்கின்றோம். வளரும் பிள்ளைகளிடம், பிஞ்சு உள்ளங்களில் கல்லூரி
மாணவர்கள் இடையே, சாதி வெறி எனும் ஆலகால விஷம் திணிக்கப்படுகிறது.

தங்கள் சுயநலத்திற்காக, அரசியல் லாப வேட்டைக்காக, தங்களை அரசியல்
தலைவர்களாகக் காட்டிக் கொள்வதற்காக, 1980க்குப் பின்னர் தீவிரமாகப்
புறப்பட்டுள்ள சிலர், தமிழ்நாட்டின் வளமான எதிர்காலத்திற்கே உலை வைக்கும்
கொள்ளிக் கட்டைகளைத் தூக்கித் திரிகிறார்கள். நான் போட்டியிடுவதாக
அறிவித்த கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர், தான்
குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்; எங்களுக்கு 70000 வாக்குகள்
இருக்கின்றன; வைகோ சார்ந்துள்ள சமுதாயத்திற்கு 52000 வாக்குகள்தான்
உள்ளன; அதையும் போட்டி போடும் வேட்பாளர்கள் பிரித்துக் கொள்வார்கள்.
அதனால் நான்தான் வெற்றி பெறுவேன் என்று கூறுகிறார். இதைக்
கண்டித்துத்துத் தி.மு.க. தலைமை எந்த அறிக்கையும் தரவில்லை. அறிவாசான்
தந்தை பெரியார் அவர்களின் தலைமை மாணாக்கர் பேரறிஞர் அண்ணா அவர்கள்
உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகத்திற்கா இந்தக் கதி?



நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபொழுது சாதி மத வேறுபாடுகள் ஏதும்
இன்றிப் பணி ஆற்றியுள்ளேன். வடக்கு திட்டங்குளம் கிராமக் குடிநீர்த்
தேவையை நிறைவு செய்ய இரண்டு மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகளும், ரேசன்
கடையும் கட்டுவதற்கு எனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு
நிதியில் இருந்து பணம் ஒதுக்கிக் கட்டித் தந்துள்ளேன்.

கோவில்பட்டி பிரசாரத்தில் என் முதல் நிகழ்ச்சியே வடக்கு
திட்டங்குளம்தான். அந்த ஊருக்குச் செல்லும்போதெல்லாம் நான் பசும்பொன்
தேவர் திருமகனாரின் திரு உருவச்சிலைக்கு மாலை அணிவிப்பது வழக்கம்.
அப்போதெல்லாம் அனைத்து சமூகத்தினரும் ஒன்றாகத் திரண்டு என்னை
வரவேற்பார்கள். ஆனால், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் என்னை
மையப்படுத்தி சாதி வேற்றுமையையும், சாதி மோதலையும் ஏற்படுத்த தி.மு.க.
திட்டமிட்டு இருப்பது, ஆதாரபூர்வமாக எனக்குத் தெரிய வந்துள்ளது.
அதனால்தான், நேற்றைய தினம் திட்டங்குளத்தில் தி.மு.க.வினர் சிலர் தேவர்
சிலையை நெருங்க விடாமல் கலவரம் செய்ய முனைந்தார்கள். நண்பகல் இரண்டு
மணியில் இருந்தே முழு மது போதையில், சாதியைக் குறித்து என்னை வசைபாடிக்
கொண்டே இருந்துள்ளனர்.

சாதியைக் குறித்தும், கலப்புத் திருமணம் செய்து கொண்ட சங்கர்
உடுமலைப்பேட்டையில் படுகொலை செய்யப்பட்டதற்கு நான் கண்டனம்
தெரிவித்ததையும், மருத்துவமனையில் கௌசல்யாவுக்கு நான் ஆறுதல் சொன்னதையும்
குறிப்பிட்டு, தொடர்ந்து வெறிக் கூச்சல் போட்டுள்ளனர். நான் பிரசார
வேனில் ஊருக்குள் சென்று, தேவர் சிலைக்குச் சற்றுத் தொலைவில் வேனை
நிறுத்திவிட்டுக் கீழே இறங்கி தேவர் சிலை நோக்கிச் சென்றபோது, பத்துப்
பேர் கெட்ட வார்த்தைகளால் என்னைத் திட்டிக்கொண்டே, சங்கர் கொலையைப்
பற்றிப் பேசினவனுக்கு இங்கே என்னடா வேலை? தேவர் சிலைக்கு மாலை போட விட
மாட்டோம். மரியாதையாத் திரும்பிப் போ என்று கூச்சல் போட்டனர்.


அவர்கள் திட்டமிட்டுக் கலகத்திற்கு முனைகிறார்கள் என்பதை உணர்ந்து
திரும்பி பிரசார வேனுக்குச் சென்றேன். நான் சாதிகளுக்கு அப்பாற்பட்டவன்;
மாமன்னர் பூலித்தேவருக்குத் தமிழ்நாட்டிலேயே முதன்முதலில் கழுகுமலைக்கு
அருகில் உள்ள சிதம்பராபுரத்தில் என் சொந்தச் செலவில், சிலை அமைத்தவன்
நான். அவர் தேவர் என்பதற்காக அல்ல. வெள்ளையரை எதிர்த்து முதல் வாள்
ஏந்தியவர் என்பதற்காக. நாங்குநேரி அருகே உள்ள மறுகால் குறிச்சி
கிராமத்தைச் சேர்ந்த தேவர் சமூகத்து இளைஞன் வானமாமலையை ஒரு காரணமும்
இல்லாமல் திட்டமிட்டுக் காவல்துறை ஆய்வாளர் சுட்டுக் கொன்றதைக்
கண்டித்து, ஆயிரக்கணக்கானவர்களைத் திரட்டி வட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு
எதிரே என் தலைமையில் உண்ணாவிரத அறப்போர் நடத்தினேன். அதில் பொது உடைமை
இயக்கத்தின் தலைவர் அண்ணன் நல்லகண்ணு அவர்களும் கலந்து கொண்டார்கள்.
கொலையுண்ட இளைஞனின் மனைவிக்கு, அரசாங்க வேலையும் பெற்றுக் கொடுத்தேன்.

23.4.1979 அன்று, பனவடலிசத்திரத்தில் விவசாயப் போராட்டத்தின்போது,
அய்யாப்பழம் என்ற காவல்துறை அதிகாரி மோதலில் கொல்லப்பட்டபோது, அந்தச்
சம்பவத்திற்குத் தொடர்பு இல்லாத, வன்னிக்கோனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த
நிரபராதிகளான பரமசிவத் தேவர், வெளியப்பத் தேவர் ஆகிய இருவருக்கு, நெல்லை
செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஒரு போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட நான், பாளைச்சிறையில்
இருந்தபோது, அவர்கள் இருவரும் என்னைச் சந்தித்துத் தங்கள் விடுதலைக்கு
ஏற்பாடு செய்யுமாறு என்னிடம் வேண்டினார்கள். தமிழ்நாட்டின் அன்றைய பிரபல
வழக்கறிஞரும், பார்-அட்-லா படித்தவருமான கோவிந்தசாமிநாதன் அவர்களைக்
கொண்டு அந்த வழக்கை என் சொந்தச் செலவில் நடத்தி, அவர்கள் இருவருக்கும்
விடுதலை பெற்றுத் தந்தேன்.

தாழையூத்து காவல் நிலையத்தில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்ட
வழக்கில், தேவர் சமூகத்தைச் சேர்ந்த தி.மு.க. ஒன்றியச் செயலாளர்
புல்லையாவின் அண்ணன் மகன் பாண்டி கைது செய்யப்பட்டார். அவர்களது வீடுகளை
புல்டோசர் கொண்டு இடித்துத் தரை மட்டமாக்க முயன்றபோது, நான் குறுக்கே
நின்று அதைத் தடுத்தேன்.

1991 நாடாளுமன்றத் தேர்தலில், கயத்தாறுக்கு அருகில் உள்ள
காப்புலிங்கம்பட்டி என்ற, மறவர் சமுதாயத்தினர் மட்டுமே வாழ்கின்ற ஊரில்,
வாக்குப்பதிவு அன்று காவல்துறையினரைத் தாக்கி விட்டார்கள் என்று, அந்த
ஊரையே சூறையாட ஆயிரம் போலீசார் கயத்தாரில் குவிக்கப்பட்டபோது, போலீஸ்
டிஐஜி, எஸ்.பி.யிடம், யாரோ ஒருவர் செய்த தவறுக்காக, ஊரையே அழிக்கப்
பார்க்கின்றீர்களே? ஊருக்குச் செல்லும் பாதையின் குறுக்கே நான்
படுப்பேன்; என் பிணத்தின் மீதுதான் நீங்கள் ஊருக்குள் நுழைய முடியும்
என்றேன். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, காவல்துறையினர் தாக்குதல்
திட்டத்தைக் கைவிட்டார்கள். ஊர் மக்கள் காளியம்மன் கோவிலுக்குப் படையல்
செய்து, என்னை அழைத்து நன்றி தெரிவித்தார்கள்.

1996 இல், விருதுநகர் மாவட்டத்தில் தேவர் சமூகத்தினருக்கும், தேவேந்திர
சமூகத்தினருக்கும் இடையில் கலவரம் ஏற்பட்டு, இருதரப்பிலும் படுகொலைகள்
நிகழ்ந்தன. அப்பொழுது, இருதரப்புக் கிராமங்களுக்கும் சென்ற என்னை
மட்டும்தான் நள்ளிரவிலும் கூட மக்கள் காத்திருந்து வரவேற்றனர். வைகோ
எல்லோருக்கும் பொதுவான ஆள்; அவர் மட்டும் ஊருக்குள் வரட்டும் என்று
அனுமதித்தனர். ஒவ்வொரு ஊரிலும் இருதரப்பினரும் ஒற்றுமையாக வாழ
மன்றாடினேன். இவற்றை எல்லாம் திட்டங்குளம் மக்களிடம் கூறியதோடு, கடந்த
நாற்பது ஆண்டுகளாகப் பசும்பொன்னுக்குச் சென்று தேவர் திருமகனுக்குப்
புகழ் அஞ்சலி செலுத்துகின்ற, தேவர் சமுதாயம் அல்லாத ஒரு அரசியல்வாதி
நான்தான். ஓட்டு வேட்டைக்காகக் கடந்த இருபது ஆண்டுகளாக மற்ற தலைவர்கள்
அங்கே வருகின்றார்கள்.

அப்படிப் பசும்பொன்னுக்குச் செல்வது, அத்தலைவர் தேவர் சமூகத்தைச்
சேர்ந்தவர் என்பதற்காக அல்ல. வங்கத்துச் சிங்கம் நேதாஜிக்கு அவர்
வலதுகரமாகத் திகழ்ந்ததாலும், பிரம்மச்சரியத்தை ஒழுக்கத்தைக்
கடைப்பிடித்தவர் என்பதாலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தலித்
மக்களின் ஆலயப் பிரவேசத்திற்குப் பாதுகாப்புக் கொடுத்தவர் என்பதாலும்,
அவை எல்லாவற்றையும்விட, எனக்குப் பத்து வயது இருக்கும்போது எங்கள்
வீட்டுக்கு வந்து பசும்பொன் தேவர் அவர்கள் என் தந்தையிடம் நீங்கள்
இனிமேல் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கக் கூடாது என்று கூறியபோது, அரைக்கால்
சட்டை போட்ட சிறுவனாக இருந்த நான், அவரது தோற்ற கம்பீரத்தில் மனதைப்
பறிகொடுத்ததாலும், அவர் மீது எனக்கு இனம் புரியாத பற்றுதல் ஏற்பட்டதாலும்
பசும்பொன் செல்கிறேன் என்பதையும் சொன்னேன்.

எனது கோவில்பட்டி தொகுதிப் பிரசாரத்தின் முதல் நிகழ்ச்சி இது. இதில்
தேவர் சிலைக்கு மாலை போட விடாமல் தடுத்து விட்டால், வைகோவை ஊர் மக்கள்
விரட்டி அடித்தார்கள் என்று அனைத்து ஏடுகளிலும் செய்தி போடுவார்கள்;
அதுதான் அவர்களது நோக்கம் என்பதை உணர்ந்துதான், தேவர் சிலைக்கு மாலை போட
வருகிறேன்; எத்தனை பேர் அரிவாளோடு வருகிறீர்கள்? தேவர் சிலைக்கு மாலை
போடாமல் இந்த ஊரை விட்டுப் போக மாட்டேன் என்று கூறி, என் காலணிகளை
வேனிலேயே கழற்றி வைத்து விட்டு, கலகம் வரும் என எதிர்பார்த்து, கருப்பு
சால்வையையும் வேனில் போட்டு விட்டு, வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு
சிலையை நோக்கிச் சென்றேன். இதன்பிறகுதான், காவல்துறையினர் அவர்களை
அப்புறப்படுத்தினார்கள்.

வன்முறையில் ஈடுபட நான் கருதி இருந்தால், என்னோடு வந்த 50 க்கும்
மேற்பட்ட தொண்டர்படை வீரர்கள், எனக்காகத் தங்கள் உயிரையும் தத்தம்
செய்யும் தீரர்கள், என் சொல்லுக்கு அஞ்சியே மிகக் கட்டுப்பாட்டுடன்
நடந்து கொண்டார்கள். அவர்கள் அனைவருமே மறுகால்குறிச்சி தேவர் சமூகத்தைச்
சேர்ந்தவர்கள்தான். 1983 இல் அண்ணன் கலைஞருக்காக நான் ஏற்படுத்திய
தொண்டர் படையைச் சேர்ந்தவர்கள்தான். அவர்களுள் பலர் நடுவயதை எட்டியதால்,
அவர்களது பிள்ளைகள் இப்போது எனக்குப் பாதுகாப்பாக இருக்கின்றார்கள்.

தேவர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, தெற்கு திட்டங்குளம் சென்று,
அங்கே இமானுவேல் சேகரனார் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, விளாத்திகுளம்
தொகுதிப் பிரசாரத்தை நான் தொடர்ந்தேன். எனக்குக் கிடைத்த நம்பகமான
தகவலின்படி, இந்தத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் என்னை மையமாக
வைத்து, தேவர் - நாயக்கர் சாதிக் கலவரத்தை ஏற்படுத்த தி.மு.க, தலைமையைத்
தற்போது இயக்கிக் கொண்டு இருப்பவர் திட்டமிட்டு இருப்பதும், அந்த யோசனையை
தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் ஊக்குவித்ததையும்
நான் அறிய நேர்ந்தது. கோவில்பட்டி தொகுதி முழுவதும் கலவரம் நடத்தத்
திட்டமிட்டு இருக்கின்றார்கள் என்பதையும் அறிந்தேன்.

என்னைக் குறிவைத்துச் சாதி மோதல் ஏற்படுவதையும், இரத்தக்களறி ஆக்க
முனைவதையும் நினைத்துப் பார்க்கவே மனம் வேதனையில் துடிக்கின்றது. சாதி
வெறியும், சாதிய ஆணவமும், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நாசமாக்கி விடும்
என நான் உணர்வதால், அந்த அபாயகரமான சீர்கேட்டைத் தடுக்கவும்,
தமிழ்நாட்டின் ஜீவாதார, நீராதார நிலைகளையும் காக்கவும், நான் பிறந்த
பொன்னாடாகிய தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் விவசாயிகள்,
மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள், அரசு ஊழியர்கள்,
மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் நல்வாழ்வுக்குப்
பாடுபடவும், புற்று நோயாகி வரும் ஊழலை அறவே ஒழிக்கவும், மதுக்கொடுமையில்
இருந்து தமிழ்நாட்டை மீட்கவும், தரணியெங்கும் வாழும் தமிழர்களின் நலனைக்
காக்கவும், சுதந்திரத் தமிழ் ஈழ தேசத்தை நிர்மாணிக்கவும் எஞ்சிய என்
வாழ்நாளை அர்ப்பணிப்பது என முடிவு செய்துள்ளேன்.

ஐவரின் தியாகத் தணலில் உதயமான மறுமலர்ச்சி தி.மு.கழகத்தை எவரும் நெருங்க
முடியாத எஃகுக் கோட்டையாக நிர்மாணிப்பேன்.
திராவிட இயக்கத்தில் ஒளி வீசுகின்ற தந்தை பெரியாரின் சுயமரியாதையுடன்,
அண்ணாவின் இலட்சியக் கனவுகளை நனவாக்கி வெற்றி பெறுவேன் என்று என்
நெஞ்சுக்குள் தவம் செய்து, சபதம் பூண்டுள்ளேன்.

இந்தப் பின்னணியில், 2016 மே 16 இல் நடைபெற இருக்கும் தமிழகச் சட்டமன்றத்
தேர்தலில், நான் போட்டியிடுவது இல்லை என்றும், கோவில்பட்டி தொகுதியில்
போட்டியிடுவதற்குத் தகுதியான வேட்பாளராக விநாயகா ரமேஷ் அவர்களது
பெயரையும், கழகத்தின் அவைத்தலைவர் அண்ணன் திருப்பூர் சு.துரைசாமி, ஆட்சி
மன்றக் குழுச்செயலாளர் அ. கணேசமூர்த்தி, அரசியல் ஆய்வு மையச் செயலாளர்
மு.செந்திலதிபன், அரசியல் ஆலோசனைக்குழுச் செயலாளர் புலவர் செவந்தியப்பன்
ஆகியோரிடமும், துணைப் பொதுச் செயலாளர்கள் நாசரேத் துரை, மல்லை சத்யா,
துரை. பாலகிருஷ்ணன் ஆகியோரிடமும் தெரிவித்து, அவர்களின் முழு
சம்மதத்துடன் இந்த முடிவை அறிவிக்கிறேன்.

எமது அணியின் முதல்வர் வேட்பாளரான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தேசிய
முற்போக்கு திராவிட கழகம், மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ் மாநில
காங்கிரஸ் கட்சி ஆகிய ஆறு கட்சிகளும் இணைந்து அமைத்துள்ள மாற்று அரசியல்
வெற்றிக் கூட்டணி, நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று
ஆட்சியை அமைக்க, பசி நோக்காது, கண் துஞ்சாது, மெய் வருத்தம் பாராது நான்
பாடுபடுவேன்.

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காத கழகக் கண்மணிகள், எனது முடிவை
ஏற்றுக்கொண்டு, 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பம்பரமாகச் சுழன்று,
தோழமைக் கட்சித் தலைவர்கள் நம்மைப் பாராட்டும் வகையில் பணியாற்றிடப்
பாசத்தோடும் உரிமையோடும் வேண்டுகிறேன்" என்று விளக்கமளித்துள்ளார்.


இதுப்பற்றி கருத்து கூறும் அரசியல்நோக்கர்களும், சமூக .ஆர்வலர்களும்
வைகோவின் இந்த முடிவு அவர் தோற்றுவிடுவே
£ம் என்ற பயத்தினால்தான் எடுத்துள்ளார்.ஒரு போர் நடைபெறுகிறது என்றால்
அரசன் முன்னின்று வழிநடத்தவேண்டும்.போரில் வெற்றி தோல்வி இரண்டுமே
சகஜம்.அரசன் தோற்று விடுவோம் என்று பயந்து வீரர்களை முன்னால்
அனுப்பிவிட்டு ஓய்வெடுத்தால் போரில் வீரர்கள் எப்படி போரிடமுடியும்?
அல்லது வெற்றிதான் கிடைக்கும் என்று தெளிவாக சொல்லமுடியுமா?
அப்படியிருக்கிறது வைகோவின் போட்டியிடாமல் விலகியது.இதற்கு அவர் ஆயிரம்
காரணங்களை கூறினாலும் இதற்கான பலனை மக்கள் நலக்கூட்டணி அனுபவித்தே
தீரவேண்டும்.அந்த பலன் என்பது நல்லபலனாக இருக்காது என்பது
உண்மை என்றனர்.இது தேர்தலுக்கு பிறகு தெரியவரும் என்றாலும் , இப்போதே
கூட்டணிக்குள் சத்தமில்லாமல் யுத்தமாக வெடித்துக்கொண்டுள்ளதை பலரும்
கவணித்துதான் வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக