📡இன்றைய🚨முக்கிய📡செய்திகள் 06/04/16 !
தமிழக மீனவா்கள் 44 போ் மன்னாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி விடுதலை செய்யப்பட்டனா்.
வடபழனி காவல் நிலையத்தில் விசாரனை கைதி உயிரிழந்த விவகாரம் இன்ஸ்பெக்டா் உள்பட 3 பேருக்கு ஆயுள் தன்டனை - உயா்நீதிமன்றம் அதிரடி.
பிரேமலதா கட்சி விவகாரத்தில் தலையிடவில்லை என்றால் கட்சி உருப்படும். அவர் பிஜேபியுடன் தான் கூட்டணிக்கு போக ஆசைப்பட்டார். பிரேமலதாவின் நிபந்தனைகளை பிஜேபி ஏற்கவில்லை - சந்திரகுமார் எம்எல்ஏ.
திமுக அதிமுக கட்சிகள் பிற கட்சி எம்எல்ஏக்களை விலை கொடுத்து வாங்குவது வாடிக்கையான ஒன்று - வைகோ குற்றசாட்டு.
மும்பை குண்டுவெடிப்பு : முசாமில் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை.
தேமுதிக உட்கட்சி பிரச்சினையில் தலையிட வைகோவிற்கு எந்த ஒரு அருகதையும் இல்லை - சந்திர குமார் எம்எல்ஏ.
பாவம் அந்த அதிமுக அமைச்சர்கள் என்று தான் சொல்லத் தோன்றுகிறது - திமுக தலைவர் கலைஞர் அறிக்கை.
பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பாளராக சிஆர்.சரஸ்வதி நியமனம் - ஜெயலலிதா அறிவிப்பு.
சந்திரகுமார் பச்சைத்துரோகம் செய்துள்ளார். சந்திரகுமாரும், கருணாநிதியும் வேறு தொழில் செய்திருக்கலாம் - வைகோ.
விஜயகாந்த் திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் அது ஒன்றே எங்கள் குறிக்கோள் உண்மையான தேமுதிக நிர்வாகிகளை ஒன்று திரட்டி ஓரிரு நாளில் பத்திரிக்கையாளர்களை சந்திப்பேன் - சந்திரகுமார் எம்எல்ஏ.
ஜம்மு காஷ்மீரில் மாநிலத்தில் பயங்கரவாதி சுட்டுக் கொலை.
தி.நகர், காட்டுமன்னார்கோயில், வேதாரண்யம், மேட்டூர், பூம்புகார், மன்னார்குடி, நாகர்கோவில் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் மாற்றம் - ஜெயலலிதா அறிவிப்பு.
சந்திரகுமார் எம்எல்ஏ ஆண்மகன் இல்லை தேமுதிக கட்சியில் இருந்து விலகியவர்கள் இனி வட்ட செயலராக கூட வரமுடியாது கட்சி உடைப்பு என்பது ஒரு விளம்பர செய்தி - பார்த்தசாரதி தேமுதிக எம்.எல்.ஏ.
தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் ஒரு துரோகி பதவிகளை அனுபவித்து விட்டு தற்போது குறை கூறுகிறார் - அனகை முருகேசன்
தேமுதிக கரைவேட்டியையும், சட்டை பாக்கெட்டில் உள்ள விஜயகாந்த் படத்தை எடுக்க மாட்டோம் விஜயகாந்த் தான் எப்போதும் எங்கள் தலைவர் - சந்திரகுமார் எம்எல்ஏ.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு டோல்கேட் அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை.
அருணாச்சல் பிரதேச எல்லையான பிஸ்வநாத் சைராளி மாவட்டத்தில் பெஹோலி வனப்பகுதியில் இருந்த கிராமத்திற்குள் நேற்று இரவு புகுந்த காட்டு யானை குடிசை வீட்டை தாக்கியது கைக்குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி.
நாகை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜெயபால் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஓ.எஸ்.மணியன் நியமனம் -ஜெயலலிதா அறிவிப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக