உங்கள் பகுதி செய்திகளை உடனடியாக உலகின் பார்வைக்கு அறியவைக்க தொடங்கப்பட்டதுதான் இந்த இதழ்.விரைவாக செய்திகளை அனுப்பி சரியான தீர்வினை பெற்றிட வேண்டுகிறோம்.

Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com - Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com -Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com

செவ்வாய், 12 ஏப்ரல், 2016

ஜெ பேச்சு

விருத்தாசலத்தில் முதல்வர் ஜெயலலிதா அதிரடி பேச்சு.....!!!      ஒரு தாய்க்குத்தான் பிள்ளைக்குத் தேவையானது என்பது தெரியும். எனவே உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று இந்த தாய்க்குத் தெரியும். கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்ததை விட அதிக திட்டங்களை அதிமுக அரசு செய்ய மீண்டும் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சென்னையில் நடந்த பிரசாரத்தைத் தொடர்ந்து இன்று 2வது பிரசாரத்தை ஜெயலலிதா விருத்தாச்சலத்தில் மேற்கொண்டு பேசினார். வழக்கம் போல இருக்கையில் அமர்ந்தபடி அவர் பேசினார்.

கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்குட்பட்ட 13 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஆதரித்து இன்றைய பிரசாரத்தின்போது பேசினார் ஜெயலலிதா. வழக்கம் போல எழுதி வைத்த உரையை ஜெயலலிதா வாசித்தார்.
ஜெயலலிதாவின் பேச்சிலிருந்து...
5 ஆண்டுகளில் 13 தொகுதிகளில் வாரியாக மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார் ஜெ.
வணிகர்களுக்கு உதவ அம்மா சிறு வணிகத் திட்டம் - ஜெ.
வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் 25 சதவீத மூலதன மானியத்துடன் ரூ. 5 லட்சம் கடன் - ஜெ.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எடுக்கப்பட்ட சுகாதாரத் திட்டங்களால் தொற்று நோய் ஏற்படவில்லை - ஜெ.
தானே புயலின்போது அதிமுக அரசு தீவிரமாக செயல்பட்டது
15 நாட்களிலேயே அதிமுக ஆட்சியில் பாதிப்புகள் சீர் செய்யப்பட்டன
தானே புயல் தாக்கியபோது துரித நடவடிக்கை மேற்கொண்டு மக்களை அப்புறப்படுத்தி உயிரிழப்பு தடுக்கப்பட்டது - ஜெ.
ஆனால் திமுக ஆட்சியின்போது வந்த நிஷா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் ஒரு வருடத்திற்குப் பிறகுதான் சரி செய்யப்பட்டது - ஜெ.
அரசு கல்லூரிகளில் வழங்கப்படுவது போல முதல் தலைமுறை மாணவர்களுக்கான அனைத்து சலுகைகளும் வழங்கப்படுகிறது
கடலூர் மாவட்டத்தில் இயற்கை சீற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம்- ஜெ.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பெருமையைக் காக்க அதை அரசே கையகப்படுத்தியது - ஜெ.
மீன் வளப் பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளோம் - ஜெ.
மீனவர் நலத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம் - ஜெ.
மீனவர் நலத் திட்டங்களைப் பட்டியலிட்டுப் பேசுகிறார் ஜெயலலிதா
அதிமுக ஆட்சியில் உணவு தானிய உற்பத்தி 68.46 சதவீதம் அதிகரித்துள்ளது.
விவசாயம் மேம்பட பல நடவடிக்கைகளை அதிமுக அரசு எடுத்தது - ஜெ
இரண்டாம் பசுமைப் புரட்சி மூலம் விவசாய உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை - ஜெ.
உணவு தானிய உற்பத்தியில் சாதனைகளைப் படைத்து வருகிறோம் - ஜெ.
வருங்காலத்திலும் உங்களுக்கு என்ன தேவை என்பது எனக்குத் தெரியும்
உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று இந்தத் தாய்க்குத் தெரியும் - ஜெ.
மக்களால் நான், மக்களுக்காக நான் என்ற அடிப்படையில் எனது பொது வாழ்வு அமைந்துள்ளது - ஜெ.
நான் சொன்னதைச் செய்தேன், சொல்லாததையும் செய்தேன் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன் - ஜெ.
நீங்களே எதிர்பார்க்காத அம்மா உணவகங்கள் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது - ஜெ.
அறிவிக்காத, சொல்லாத பலவற்றையும் செய்தேன் - ஜெ.
விலையில்லா அரிசி, குறைந்த விலை பருப்பு, சமையல் எண்ணைய் திட்டம் தந்தது அதிமுக
தாலிக்குத் தங்கம், திருமணத் திட்டம், மகப்பேறு உதவித் திட்டம், வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் கொண்டு வந்தது அதிமுக -ஜெ
3 மாவட்டங்களின் 13 தொகுதிகளுக்கும் சேர்த்து ஒரே இடத்தில் ஜெ. பிரசாரம்
தமிழகத்தில் மக்கள் அச்சமின்றி வாழ அதிமுகவுக்கு வாக்களியுங்கள் - ஜெயலலிதா
வளர்ச்சியும், வளர்ச்சியும் நீடிக்க அதிமுக நல்லாட்சி தொடர வேண்டும் - ஜெயலலிதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக