தமிழகத்தில் ஆட்சி மாற்றம் இருக்குமா? என்பது தற்போது எல்லா இடத்திலும்
ஒலிக்கும் கேள்வி. காரணம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பல முனை
போட்டிகள் நிலவுகிறது.வழக்கம்போல அதிமுக, திமுக இடையேதான் போட்டி என்று
சொல்லி வந்ததை தற்போதைய தேர்தலில் சொல்லமுடியாது.ஆனாலும் ஆழ்ந்து
பார்க்கும்போது எத்தனைபேர் போட்டியிட்டாலும் இரு திராவிடக்கட்சிகளை
தாண்டி யாராலும் கால் வைப்பது முடியாத காரியம் என்கிறார்கள் அரசியல்
விமர்சகர்கள்.வருங்காலங்களில் மாற்று என்பது சாத்தியப்பட்டாலும் அதற்குள்
எதுவேண்டுமானாலும் நடக்கலாம்.இப்போது 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக
பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் நிலை உள்ளதை
மறுக்கவும் முடியாது என்பதும் அவர்களின் கருத்து. எப்படி சொல்லமுடிகிறது
என்றால் இப்போதைய ஆட்சியில் குறைகளை காண்பது என்பது சொல்ல வேண்டும்
என்பதற்காக எதிர்கட்சிகள் சொல்கிறார்கள்.மற்றபடி பார்த்தால் இப்போதைய
அதிமுக ஆட்சியில் சரியாக செயல்பட்டிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.அதை
சொல்லி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.மக்களிடம் எந்த விதமான
எதிர்ப்பு அலையும் இல்லை.இதுவே ஆட்சியின் சாதனைதான் என்றும்
கூறுகிறார்கள்.
இதுப்பற்றி மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது?
தமிழ்நாட்டின் சரிபாதியாக இருக்கும் கிராமப்புறங்களில் 90 சதவீதம் பேர்
"அண்ணா தி.மு.க ஆட்சி வேண்டும்" என்று உறுதியாகப் பதில் தருகிறார்கள்;
மாநிலத்தின் மற்றொரு பாதியாக இருக்கும் நகர்ப்புறங்களில் 60 சதவீதம் பேர்
"அண்ணா தி.மு.க ஆட்சி நீடிக்கும்" என்று நம்பிக்கை
தெரிவித்திருக்கிறார்கள்.
கல்வி தந்த ஜெயலலிதா
"கடந்த ஐந்தாண்டுகள் ஜெயலலிதா தலைமையில் நடந்த ஆட்சியில் எங்கள்
குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைத்துள்ளது; குழந்தைகளுக்கு நல்ல
புத்தகப்பையும் கல்விச் சாதனங்களும் வாங்கித்தரும் அளவுக்கு எங்களுக்கு
வசதி இல்லை. அதனை தமிழக முதல்வர்
அம்மா பார்த்துக்கொண்டார்" என்று தொழிலாளிகள் ஒரே குரலில் சொல்வதை
தமிழ்நாட்டின் எல்லா கிராமங்களின் குரலாகவும் நீங்கள் பார்க்கலாம்.
"ஆடு, மாடுகள் பெரும் செல்வம்"
விவசாயிகள் கூறும்போது ஆடுகள், மாடுகளைத் தந்து தங்களது வாழ்வை ஜெயலலிதா
உயர்த்தியிருப்பதாகச் சொன்னார்கள்.
"பசுமை வீடுகள் எங்களுக்கென்று கிராமத்தில் ஓர் அந்தஸ்தைத்
தந்திருக்கின்றன" என்றார் கிராமத்தில் வசிக்கும் ஓர் பெண்மணி.
இளம் வாக்காளர்களைக் கவர்ந்த ஜெயலலிதா
சில நகர்ப்புறக் குடும்பங்களில் பல பெற்றோர்கள்
ஆட்சி மாற்றத்தைப் பற்றி சிந்திக்கிறார்கள்.
ஆனால் இவர்களுடைய பிள்ளைகள் கூறும்போது
"ஆட்சி தொடரட்டும்" என்று சொல்லி ஆச்சரியப்படுத்தினார்கள்.
"ஜெயலலிதாவுக்கு சிறந்த தலைமைப் பண்புகள் இருக்கின்றன; அவர் நல்ல
நிர்வாகி" என்று பலஇளம்பெண்கள் சொல்கிறார்கள்.மக்களுக்கு நல்லது
தரக்கூடிய எந்த முடிவையும் சுயமாக எடுத்து விரைவாக செய்யக்கூடியவர்
ஜெயலலிதா.அதனால் அவரது ஆட்சி தொடர்வதில் எந்த தப்பும் இல்லை.
இளம் வாக்காளர்கள் "அம்மா ஆட்சி தொடர வேண்டும்; கடந்த ஐந்தாண்டு ஆட்சி
சிறப்பானதாக இருந்தது" என்று சொன்னார்கள்."இந்த ஆட்சி நல்லாத்தானே
போயிட்டிருக்கு; எதுக்கு மாற்றம்?" என்று கேள்வி எழுப்பியவர்கள் பலர்.
எதிர் முகாமான
திமுக முகாமில் ஸ்டாலினைப் பற்றிக் கேட்டால் வெகுசில இளம் வாக்காளர்களையே
அவர் பாதித்திருப்பது தெரிகிறது; "நமக்கு நாமே" பிரச்சாரப் பயணத்துக்குப்
பின்னரும் வெளிச்ச பஞ்சத்தில் அவதிப்படுகிறார் தி.மு.கவின் தளபதி.
இவையெல்லாம் மக்களிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திடாது என்றும்
சொல்கிறார்கள்.
ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரே
விஜயகாந்திற்காகவும் வைகோவிற்காகவும்,பாமக, நாம்தமிழர் கட்சி, பாஜக
உள்ளிட்டவர்களுக்காக உணர்ச்சி பொங்கப் பேசுகிறார்கள்.அதெல்லாம் எப்படி
வாக்காக மாறும் என்று சொல்லவே முடியாது. இவர்கள்மாற்று அரசியல் என்பதை
வலியுறுத்தி வாய்வலிக்க பிரச்சாரம் , அறிக்கைகள் செய்திட்டாலும்
தமிழ்நாட்டின் அரசியல் நிலப்பரப்பில் அதிரடியான தாக்கத்தை யாரும் புதிதாக
உருவாக்கவில்லை என்பது அப்பட்டமான உண்மை.
ஆட்சி மாற்றத்தைக் கோரும் ஒரு பிரிவினரின் பார்வையோ இப்படியாக உள்ளது.
நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தினரில் ஒரு பிரிவினர் ஜெயலலிதாவை
"அகங்காரம்" கொண்டவராகச் சித்தரிக்கும் தி.மு.க சார்பு ஊடகப்
பிரச்சாரத்துக்குப் பலியாகியிருக்கிறார்கள்; 1990கள் முதலே தமிழக அரசியல்
ஊடகங்கள் வழியாகத்தான் நடத்தப்பட்டு வருகிறது; ஆனால் தலைவர்களே நேரடியாக
இறங்கி அரசியல் செய்வதுபோலவும் ஜெயலலிதா மட்டும் அதனைச் செய்யவில்லை
என்பதுபோன்ற மாயத்தோற்றத்தையும் தி.மு.க சார்பு பரப்புரை எந்திரங்களாகச்
செயல்பட்டு வரும் ஊடகங்கள் நிறுவி வருகின்றன.இது ஒரு மாயத்தோற்றம்
மட்டுமே.
ஜெயலலிதா தனது 68வது வயதில் பல உடல்நலப் பிரச்சினைகளைச் சமாளித்துக்
கொண்டும் ஆட்சி நிர்வாகத்தைப் பராமரித்துக் கொண்டும் இருக்கிறார்.இதனை
அ.தி.மு.க சார்பு ஊடகங்கள் நடுநிலை வாக்காளர்களிடம் ஏற்படுத்தத்
தவறிவிட்டன. இந்த இடைவெளியை தி.மு.க சார்பு ஊடகங்கள் சரியாகப்
பயன்படுத்திக்கொண்டுள்ளன. திமுக சார்பு ஊடகங்கள் ஜெயலலிதா நல்லதை
செய்தாலும் பொல்லாததை செய்கிறார் என்று திரித்து கூறிவருவதை பலரும்
சுட்டிக்காட்டுகிறார்கள்.இதில் நடுநிலை ஊடகங்கள் அதிமுகவின் உண்மையான
நிலையினை நல்ல செயல்பாட்டினைமக்களிடம் எடுத்து கூறுவதில் பெரிய இடைவெளி
உள்ளது.அவர்ள் எதையும் பரபரப்பாக இருக்கவேண்டும் என்பதிலேயே செய்திகளை
வெளியிட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பி வருகிறது.மற்றபடி திமுக
சொல்வது போல எதுவும் இல்லை.
தமிழகத்து மக்களின் மனநிலையின்படி சொல்லப்படுவது வருகிற தேர்தலில் அதிமுக
தான் போட்டியிடுகிற கூட்டணிக்கட்சிகளையும் சேர்த்து 234 நான்கிலும் அதீத
பலத்துடன் வெற்றி பெறும் என்பதும் மீண்டும் அதிமுக அரசே அமையும் என்பதும்
உறுதியாக சொல்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக