உங்கள் பகுதி செய்திகளை உடனடியாக உலகின் பார்வைக்கு அறியவைக்க தொடங்கப்பட்டதுதான் இந்த இதழ்.விரைவாக செய்திகளை அனுப்பி சரியான தீர்வினை பெற்றிட வேண்டுகிறோம்.

Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com - Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com -Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com

திங்கள், 19 செப்டம்பர், 2016

இயற்கை விவசாயத்தில் அசத்தும் ஓய்வு பெற்ற ஆசிரியர்


விவசாயத்தில் முன்னேற்றம் இல்லை.வாழவும் வழி தெரியவில்லை. என்னசெய்யலாம் ? என்று யோசிக்கும் விவசாயிகளுக்கு மத்தியில் மாற்றியோசித்தால் மண்ணெல்லாம் பொன்னு விளையிற பூமியாக மாற்றிடலாம் என்று ஒருவர் நிருபித்து வருகிறார்.அவர் விவசாயகுடும்பத்தில் பிறந்தவர், ஆனால் விவசாயி இல்லை.ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.ஆனாலும் மண்ணின் மீதும் இயற்கையின்மேலும் தீராத காதல்கொண்டவர்.ஆசிரியர் பணிசெய்துகொண்டே விவசாயத்தில் இவரது கவணம் திடிரென்று திரும்பியது.அப்போது வழக்கமாக யோசிக்கும் விவசாயிகளைவிட மாற்றி யோசித்தார்.விளைவு விவசாயத்தில் எதுவும்சாத்தியம் என்று இவருக்கு தோன்றியது.அதன்படி தான் மேற்கொண்டு வரும் விவசாய சம்மந்தமான செயல்களை பற்றி அவரே கூறுகிறார்.

எங்கள் ஊர் நீலகிரி மாவட்டம், குன்னு-ர் தாலுக்கா உலிக்கல் கிராமம் ஆகும்.எல்லா பகுதிகலேயும்போல வானம்பார்த்த பூமிதான்.போர்வெல் தண்ணீரும் அவ்வப்போது கைகொடுத்தாலும் எங்கள் பகுதி விவசாயிகள் கஷ்டப்படுறத பார்த்ததும் எனக்கு இது ஏன் நடக்கிறது என்று தோன்றியது.அப்போது தமிழகத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் செய்யும் விவசாயத்தில் அடிப்படை விஷயங்களை தெளிவாக தெரிந்துகொள்ளாமல் தங்களுக்கு தெரிந்ததை, அல்லது ஊரில் வழக்கமாக செய்து வருபவர்களை பார்த்து இவர்களும் அதையே செய்வது என்று இருக்கிறார்கள் என்பது தெரியவந்தது.இதனால் அவர்களுக்கு வழக்கமாக செய்து வரும் விவசாயத்தில் போதிய வருமானமும் இல்லை.இப்படியே தொடர்ந்து வருவதால் வாழ்க்கையில் விரக்தி, குடும்பத்தில் கஷ்டம்போன்றவை ஏற்படுகிறது.முடிவில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
நான் இவற்றிலிருந்து மாறுபட்டு யோசிக்கும்போது விவசாயத்தில் எதுவும் சாத்தியம் என்பதை அறிந்தேன்.அதை துணிந்து செயல்படுத்திடவும் ஆரம்பித்தேன்.அதனால் எனக்கு பல நன்மைகள் கிடைத்தது.நான் பெற்ற நன்மைகளை எங்கள் பகுதி விவசாயிகளுக்கு என்னால் முடிந்தளவு திருப்பி செய்து வருகிறேன்.
அப்படியென்ன செய்கிறேன் என்று நீங்கள் கேட்கலாம். பணி ஓய்வுபெற்ற பிறகு என்னுடைய ஐந்து ஏக்கர் தேயிலைத்தோட்டத்தில் கடந்த இரண்டாண்டுகாலமாக தரமான தேயிலைகளை உற்பத்தி செய்து நல்ல விலைக்கு விற்கிறேன்.இதற்கு நான் செய்வதெல்லாம் நமது முன்னோர்கள் கூறிய வழிக்காட்டலில் பஞ்சகாவ்யா ப்ளஸ் ஜீவாமிர்த கரைசலை நானே தயாரித்து எனது தேயிலைச்செடிகளுக்கு விசைப்பம்பின் மூலம் தெளித்து நல்ல லாபம் பெற்று வருகிறேன்.செயற்கை உரங்களான யூரியா, அமோனியா, போன்ற எவ்விதமான செயற்கை உரங்களையும் விவசாயத்திற்கும் காய்கறி பயிர்களுக்கு பயன்படுத்துவதில்லை.
இதனால் விவசாயம், காய்கறி பயிர்கள் போன்றவற்றில் அதிக தாக்குதலை உண்டாக்கும் அஸ்வினி புழு, சிவப்புசிலந்தி பூச்சி, கம்பளி பூச்சி, போன்ற எந்த பூச்சித்தாக்குதலும் உண்டாவது இல்லை.காய்கறிகள் நல்ல தரமாகவும், சத்தானதாகவும் கிடைக்கிறது.இது எனக்கு எப்படி சாத்தியமாயிற்று என்று பார்த்தால் நான் தமிழ்நாடு தோட்டக்கலை ஆராய்ச்சிமையம், தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகம், மலைப்பகுதி மேம்பாட்டுத்திட்டம் நீலகிரி மாவட்டம் விஞ்சானிகளால் அச்சிட்டு வெளியிடப்பட்ட புத்தகத்தினை படித்ததிலிருந்து எனக்குள் இருந்த இயற்கை விவசாயியை வெளியில் கொண்டுவர முடிந்தது.
அவர்களின் நூலில் உள்ளதுபோலவும், பிறகு எனக்கு தெரிந்த யோசனையின்படியும் நானே சிலபொருட்களை கொண்டு இயற்கையின் அற்புதமான பஞ்சகாவ்யா ப்ளஸ் ஜீவாமிர்த கரைசலை தயாரித்து பயன்படுத்த ஆரம்பித்தேன்.இதில் நல்ல பலன் கிடைக்கவே இதை நீலகிரிமாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் சென்று விளக்கி கூறி அனைத்து விவசாயிகளையும் பயன்படுத்த அறிவுறுத்தினேன்.மேலும் இதனை தயாரிப்பது எப்படி என்றும் விவசாயிகளுக்கு பயிற்சியும் அளித்து வருகிறேன்.நீலகிரி மாவட்டத்தில் பொதுவாகவே உற்பத்தி செய்யப்படும் தேயிலைக்கு நல்ல விலைகிடைக்காமல் இருந்த நிலையில் என்னால் உருவாக்கப்பட்ட இயற்கை தேவாமிர்த கரைசலை விவசாயிகள் பயன்படுத்த ஆரம்பித்ததால் நல்ல தேயிலைக்கு நல்ல விலை கிடைக்க ஆரம்பித்துள்ளது.இதனுடன் ஆட்கள் பற்றாக்குறையால் அவதிப்படும் விவசாயிகளுக்கு என்னுடைய தோட்டத்திலிருந்து ஆட்களை அனுப்பி தரமான தேயிலையை எடுக்கசெய்து அதற்கு உரிய அதிக விலையை கிடைக்க வைக்கிறேன்.
இங்குள்ள ஜிவி எனும் தேயிலை தொழிற்சாலைக்கு எங்கள் பகுதி விவசாயிகள் அனுப்பும் தரமான தேயிலைகள் பெற்று அதிக விலையை நிர்வாகம் தந்து வருகிறது.பணியாற்றியது ஆசிரியர்பணி என்றாலும் என்னால் எங்கள் பகுதி விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை தடையில்லதமல் வழங்க முடிகிறது.எனது வீட்டிற்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் போன்றவற்றை எங்கள் வீட்டிற்கு முன்னால் உள்ள தோட்டத்தில் விளைவித்து நானே முதலில் பயன்படுத்தி மீதமுள்ளவற்றை மற்றவர்களுக்கும் பகிர்ந்து அளித்து வருகிறேன்.
பணி ஓய்வுபெற்ற பிறகு விவசாயப்பணியாக எனது பணி இருந்தாலும் நான் ஊர்மக்களின் விருப்பத்தின்படி ஊர்தலைவராகவும் பல ஆண்டுகள் இருந்து வருகிறேன்.இப்படி பல சேவைகளை விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் தொடர்ந்து செய்துவருவதால்டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதும், சமூகசேவகர் விருதும் வழங்கப்பட்டுள்ளது.ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு பலருக்கும் தொடர்ந்து உதவி வருகிறார்.பல மாணவர்களை தனது வீட்டிற்கு வரவைத்து அவர்களுடைய கல்விக்கு வேண்டிய பல உதவிகளை சத்ததில்லாமல் செய்கிறேன்.இவர் தான் பணியாற்றிய பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் மாரியப்பன் என்பவருக்கு தனது சொந்த செலவிலேயே திருமணமும் நடத்திவைத்துள்ளேன் என்று தனது இனிய சேவைகள் பற்றி கூறினார்.
பஞ்சகாவ்யா, ஜீவாமிர்த கரைசலை தயாரிப்பு முறை
பழம் நான்கு கிலோ, உளுந்து மூன்று கிலோ, கடலைப்பருப்பு மூன்று கிலோ, வேப்பிலை மூன்று கிலோ என சேர்த்து மேலும் 18 நாட்கள் ஒரு நாளைக்கு ஒருமணிநேரம் வீதம் அக்கரைலை கலக்கிவிட்டு வரவேண்டும். இதில் முப்பதுநாட்டகள் நொதித்தல் மற்றும் வேதிவினையால் பயிர்களுக்கு நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் உற்பத்தி, மற்றும் ஊட்டச்சத்துக்கள் உருவாகி இயற்கையான பஞ்சகாவ்யா , ஜீவாமிர்த கரைசல் ரெடியாகிவிடும். இதனை மூன்று விழுக்காடு எடுத்து மூன்று மில்லி அளவு மற்றும் நூறுமில்லி தண்ணீர் என்ற கணக்கில் தண்ணீரில் கரைத்து நடவு செய்த பத்து,இருபது, முப்பது, நாற்பது நாட்கள் என்ற கணக்கில் காய்கறிபயிர்கள், மற்றும் விவசாயவிளைப்பொருட்களுக்கு தெளித்து வரவேண்டும்.தேயிலைப்போன்ற பயிர்களுக்கு இரண்டுவாரத்திற்கு ஒருமுறை தெளித்து வரவேண்டும்.இதனால் பயிர்கள் பூச்சிகள் தாக்காமல் செழித்து வளர்ந்து நல்ல தராமான விளைச்லைகொடுக்கும்.இதனால் அதிக வருவாய் கிடைக்கும்.உடல், மற்றும் மனநலமும் மேம்படும்.இதனால் பயிர்கள் நோய் எதிர்ப்பு சக்தியுடன் வளர்ந்து எவ்வித கொடிய நோய்தாக்குதல்களிலும் திறன்பட வளர்கின்றது.
இது விவசாயத்திற்கு மட்டும் என்றில்லாமல் விலங்குகள், மனிதர்களுக்கும் கவணமுடன் பயன்டுத்திலாம்.இதனால் மனிதர்களுக்கு உருவாகும் சொறி, சிரங்கு ,படை போன்ற வெடிப்புக்கள், எய்ட்ஸ்நோய்கள் போன்றவற்றால் ஏற்படும் நரம்பு பாதிப்புக்கள், நீரிழீவுநோய், மூட்டுவலி, சொறியாசிஸ், நுரையீரல் சம்மந்தப்பட்ட நோய்கள் போன்றவையும் குணமாக்ககூடியது என்று ஆய்வுகள் மூலம் நிருபிக்கப்பட்டுள்ளது.இவர் இதனோடு மட்டும் அல்லாமல் சொந்தமான இயற்கைமுறையில் தேனீக்களை வளர்த்து அதிலிருந்து எடுக்கும் இயற்கையான தேனை அனைவருக்கும் வழங்கிவருகிறார்.
இப்படி தொட்டது எல்லாவற்றையும் பெரும் சேவையாக செய்து வரும் இவருக்கு அரசு மேலும் பல உதவிகளை செய்தால் தனது இயற்கைமுறையிலான விவசாயத்தில் பல புதுமைகளை செய்யமுடியும் என்றும் கூறினார்.தொடர்புக்கு&9443101372.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக