ADD1
பார்வையாளர்கள்
திங்கள், 19 செப்டம்பர், 2016
காணாமல் போன பாசன வடிகால் வாய்க்காலை தேடும் விவசாயிகள்
கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வரமங்கலம் கிராமம் . இக்கிராமத்தில் பாசன வடிகால் வாய்க்காலை காணவில்லை என்று அவ்வூரை சேர்ந்த விவசாயிகள் கோபாலகிருஷ்ணன், செல்வகுமார் ஆகிய இருவரும் கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறார்கள். இக்கிராமத்தில் ஐந்நூறு ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய விளைநிலங்கள் உள்ளது. முக்கிய விளைபொருளாக நெல், கரும்பு உள்ளிட்ட பலவகை பயிர்கள் பயிர்செய்து வரப்படுகிறது. இந்த விவசாய நிலங்களின் பாசன வடிகால் வாய்க்கால் கருங்காலி ஓடை எனும்(ஜிஹெச்)வாய்க்கால் ஆகும்.இது 5கிலோமீட்டர் நீளமும் இருபதடி அகலமும் கொண்டது. வாய்க்காலானது இப்பகுதி விவசாயிகளின் பாசனம் மற்றும் வடிகால் வாய்க்காலாக நீண்டகாலமாக இருந்து வருகிறது.
ஆனால் வாய்க்கால் இருக்கும் தற்போதையை நிலையை பார்த்தால் குறுகிப்போய் நடைபாதையாக மாறிவிடும் நிலையில் உள்ளது. தமிழக்த்தில் பொதுப்பபணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நீர்வழித்தடங்ளும் முறையான பராமரிப்பின்றி உள்ளதைப்போல இந்த பாசன வடிகால் வாய்க்காலும் இருக்கிறது.அதிகாரிகள் இவற்றிற்கு போதிய முக்கியத்துவம் கொடுக்காமல் விடுவதால் அது விவசாயிகளை பாதிக்கிறது.இதுப்பற்றி இப்பகுதி விவசாயிகள் அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் ஆமாம் இவர் ஒருத்தருக்காக நாங்கள் உடனே செஞ்சுடனுமா? என எகத்தாளமாக கேட்கிறார்கள்.
தமிழகத்தில் விவசாயம் என்பது இன்னமும் உயிரோடு உள்ளதா? எனும் நிலை உள்ளது.அதை நம்பி பிழைக்கும் விவசாயிகள் என்ன செய்வார்கள்?விவசாயிக்கு பாசனத்திற்கு தண்ணீர் இல்லை.அப்படியே தட்டுத்தடுமாறி பயிர்செய்தாலும் இயற்கையாக இருக்கவேண்டிய பாசன வடிகால் வாய்க்கால்கள் தூர்ந்துபோய் கிடப்பதால் விளைபொருட்களில் தேங்கும் அதிகப்படியான வடிகால் தண்ணீரை வடியவைக்க முடியாத நிலை இருக்கிறது.பிறகு நிலத்தில் பயிர்செய்யப்பட்டுள்ள பொருட்கள் அறுவடை செய்யமுடியாமல் வீணாகிவிடுகிறது.பல இடங்களில் நீர் நிலைகள் இருந்தும் அவை சரியாக தூர் வாரி ஆழப்படுத்தாமல் விடுவதாலும் விவசாயம் அழிந்துவிட்டது.பலர் அவ்விடங்களை தூர்த்து வழித்தடமாகவும் மாற்றுவதால் நீராதார சேமிப்பு இல்லாமல் வறட்சி தலைவிரித்தாடுகிறது.நமது தண்ணீர்தேவைக்காக பிறரிடம் கையேந்த வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுகிறோம் என்பதே உண்மை.
அப்படிதான் இந்த நந்தீஸ்வரமங்கலம் வாய்க்கால் உள்ளது.விவசாயிகளின் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட கருங்காலி ஓடை நாளடைவில் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி இந்தளவுக்கு சீரழிந்துவிட்டது.இது நந்தீஸ்வரமங்கலம் கிராமத்தின் அருகிலுள்ள பேரூர் பகுதியில் ஆரம்பித்து விழுப்பெருந்துறை, கூட்டாம்பள்ளி, குறிஞ்சிக்குடி, நங்குடி, நந்தீஸ்வரமங்கலம் கிராமத்தின் வயல்கள் வழியாக ஐந்து கிலோமீட்டர் நீளத்தில் செல்கிறது. வாய்க்காலில் வெளியேறும் தண்ணீர் வீராணம் ஏரியின் அருகில் உள்ள கோதாவரி வடிகால் வாய்க்காலில் சென்று கலக்கிறது .இந்த நிலையில் கடந்து முப்பதாண்டுகளாக வாய்க்கால் தூர்வாரப்படாததால் இப்போது பலரின் ஆக்கிரமிப்பில் விளைநிலங்களாகவும், மனைகளாகவும், சாலையாகவும் மாறிப்போய் உள்ளது.இதனால் விளைநிலங்களுக்கு போதிய பாசன வசதி கிடைக்கவில்லை.வயல்களில் தேங்கும் தண்ணீரையும் வடியசெய்யமுடியாத நிலை. இதனால் வயல் வெளிகளில் தேங்கும் வடிகால் நீர் பல ஆண்டுகளாக தொடர்ந்து வெளியேற்ற முடியாமல்போய் விவசாயிகளின் நெல், கரும்பு உள்ளிட்ட விளைபொருட்கள் பலத்த சேதமடைந்து நஷ்டத்தை உண்டாக்குகிறது.அதிலும் பருவ மழைகாலங்களில் வயல்களில் தேங்கும் மழை நீரால் விவசாயிகள் விளைபொருட்களையும் தங்களது இல்லங்களுக்கு எடுத்து செல்லடியாமல் அழுகிபோய் விடுகிறது.
இந்த பாசன வடிகால் வாய்க்கால் விருத்தாசலம் பாசனகோட்டத்திற்கு உட்பட்டது.வாய்க்கால் தூர் வாருதல் சம்மந்தமாக கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் கோபாலகிருஷ்ணன், செல்வகுமார் ஆகிய«£ர் பலமுறை அதிகாரிகளைப்பார்த்து மனுகொடுத்து வருகிறார்கள்.அவர்களது மனுவின்மேல் இதுவரை அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என வேதனையுடன் தெரிவித்தனர்.தமிழகத்தில் விவசாயம் என்பது பொய்த்துபோகும் நிலையில் இருக்கும்போது எங்களின் வாழ்வாதாரமான விவசாயத்தை காப்பாற்றிட வேண்டி இந்த பாசன வடிகால் வாய்க்காலை அரசு போர்க்கால அடிப்படையில் ஐந்துகிலோமீட்டர் நீளமும் தூர்வாரிட உத்தரவிடவேண்டும் என அவர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக