ADD1
பார்வையாளர்கள்
சனி, 24 செப்டம்பர், 2016
வலையமாதேவியில் தீயணைப்பு துறை சார்பில் செயல்முறை விளக்கம்
சேத்தியாத்தோப்பு அருகே வலையமாதேவிகிராமத்தில் மாவட்ட ஆட்சியர் உத்தரவிற்கிணங்க மாவட்ட தீயணைப்புதுறை மற்றும் மீட்புதுறை அலுவலக ஆலோசனையின்பேரில் தீயணைப்பு துறை சார்பில் மழை வெள்ள காலங்களில் பொதுமக்கள் தங்களை தாங்களே எவ்வாறு காத்துக்கொள்வது என்பது குறித்த செயல்முறை விளக்கம் சேத்தியாத்தோப்பு தீயணைப்பு மற்றும் மீட்புபணி துறையினரின் சார்பில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நிலைய அலுவலர் போக்குவரத்து மணி தலைமை தாங்கினார். வலையமாதேவி கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேத்தியாத்தோப்பு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் பொதுமக்களுக்கு மழை வெள்ளகாலங்களில் தங்களை தற்காப்பு செய்துகொள்வது என்பது குறித்தும், எளிதில் கிடைக்ககூடிய பொருட்களை கொண்டு எவ்வாறு பாதுகாப்புக்களை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்பது குறித்த செயல்முறை விளக்கைத்தையும் செய்து காண்பித்தனர்.இதில் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக