ADD1
பார்வையாளர்கள்
சனி, 24 செப்டம்பர், 2016
குணமங்கலம் முதல் மதகளிர்மாணிக்கம் இடையே தார்சாலை பள்ளம் படுகுழியால் பொதுமக்கள் அவதி
ஸ்ரீமுஷ்ணம் அருகே குணமங்கலம் ஊராட்சி உள்ளது.இதனையடுத்த மதகளிர் ஊராட்சி உள்ளது.இப்பகுதியில் எசனூர்,பூவாத்தூர், முத்துகிருஷ்ணாபுரம், கொக்கரசன்பேட்டை,ஆனந்தகுடி உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளது.இப்பகுதி பொதுமக்கள் ,விவசாயிகள், பள்ளி மாணவர்கள்,என பலரும் தினமும் ஸ்ரீமுஷ்ணம், மற்றும் இதர பகுதிகளுக்கு சென்று வருகிறார்கள்.இப்பகுதியில் ஸ்ரீமுஷ்ணம்,விருத்தாசலம் வழியே அரசுப்பேருந்து சென்று வருகிறது.குணமங்கலம் முதல் மதகளிர்மாணிக்கம் வரையான தார்சாலை பள்ளம், படுகுழியாக உள்ளதால் இருசக்கரவாகன ஓட்டிகள்,மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிவருகிறார்கள்.இப்பகுதிக்கு நலத்திட்ட பணிகளை பார்வையிட வந்த அப்போதைய மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் இப்பகுதி சாலைகள் பள்ளம் படுகுழியாக உள்ளது என பொதுமக்கள் தெரிவித்தனர்.அதற்கு உடனே நடவடிக்கை எடுப்பதாக கூறிச்சென்றார் மாவட்ட ஆட்சியர்.இதுநாள் வரை எவ்வித நடவடிக்கை இன்றியும் உள்ளது.இதனால் கனரக வாகனஓட்டிகள் ,பொதுமக்கள் உட்பட பலரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.எனவே அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு சாலைகளை சீரமைத்து இருபுரமும் தண்ணீர் தேங்காவண்ணம் வடிகால் வசதி ஏற்படுத்திதர முன்வருமா?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக