ஸ்ரீமுஷ்ணம் அருகே கொழை ஊராட்சிக்குட்பட்ட வினாயகபுரம் கிராமம் உள்ளது. கிராமத்தில் 50 குடும்பங்களும், 250 மக்கள் தொகையும் கொண்டதாக இருக்கிறது.கிராமத்தில் 1978ல் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைக்கப்பட்டது. ஏழாண்டுகளுக்கு பிறகு 1985ல் பள்ளிக்கு புதிய வகுப்பரை கட்டப்பட்டது. இப்பள்ளியில் சுமார் இருபதுக்குமேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வந்தனர்.ஆனால் இப்போது 11 மாணவர்கள் மட்டும் படித்து வருகிறார்கள். இப்பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர். ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை மாணாவர்கள் கல்வி பயிலுகின்றனர். இக்கிராமத்திலிருந்து மட்டும் அல்லாமல் மேலும் அருகிலுள்ள கொளத்தங்குறிச்சி பகுதியிலிருந்தும் இரண்டு மாணவர்கள் வருகிறார்கள்.இது கிராம பகுதியாக இருப்பதாலும் போக்குவரத்து அதிகம் இல்லாத இடமாகவும் உள்ளது. இப்பள்ளியின் கட்டிடம் பல காரணங்களால் பழுதடைந்த காரணத்தால் மாணவர்கள் அக்கட்டிடத்தில் அமர்ந்து கல்வி பயில முடியாத நிலை ஏற்பட்டது.அதனால் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் அரசு சார்பில் இடித்து தரை மட்டமாகக்கபட்டது. இதன் பிறகு மாணவர்களுக்கு பல நாட்கள் வெட்டவெளியில் மரத்தடியில் பாடம் நடத்தப்பட்டது.அதிகாரிகள் புதிய கட்டிடம் கட்டுவதற்கு இதுவரை முன்வராததால் அப்பள்ளியின் கிராம கல்விக்குழு உறுப்பினர் முருகன் என்பவர் பெரும் முயற்சி எடுத்து அருகிலுள்ள தேவேந்திரன் என்பவரது ஓட்டுவீட்டின் ஒரு அறையை பள்ளியாக மாற்றி கடந்த எட்டுமாதங்களாக மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.அந்த அறைக்கான வாடகையை இங்கு பணியாற்றும் இரு ஆசிரியர்களுமே தங்களது சம்பளத்திலிருந்து கொடுத்து வருகிறார்கள்.வாடகை வீட்டின் மேற்கூரை ஒடுகளால் உள்ளதால் வெய்யில் காலங்களில் வெப்பதாக்குதலுக்கு பள்ளி மாணவர்கள் ஆளாகும் நிலை உள்ளது.பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு கூடம் இதே வீட்டின் பின்புறம் செயல்பட்டு வருகிறது.போதிய இடவசதி இல்லாததால் பள்ளி மாணவர்கள் அமரும் பொருட்களான பெஞ்ச், ஆவணங்கள் வைக்கும் பீரோ ஆகியவை வைத்து பயன்படுத்த முடியவில்லை.
அரசு விரைவாக நடவடிக்கை எடுத்து பள்ளிக்கு புதிய கட்டிடத்தை கட்டித்தரவேண்டும். கிராமபுற மாணவர்களின் கல்வியை மேம்படுத்தவும் வேண்டும் என்றனர் இப்பகுதியில் வசிக்கும் மக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக