ADD1
பார்வையாளர்கள்
வெள்ளி, 24 பிப்ரவரி, 2017
சேத்தியாத்தோப்பில் அதிமுக ஓபிஎஸ் அணியினரின் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
சேத்தியாத்தோப்ப,பிப்.25:
சேத்தியாத்தோப்பில் அதிமுக ஓபிஎஸ் அணியினர் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.இதில் புவனகிரி தொகுதி ஒருங்கிணைப்பாளர் நன்மாறன் தலைமை வகித்தார்.நகர அவைத்தலைவர் சர்புதீன் .நகர துணை செயலாளர் ஸ்ரீதர்,பாசறை செயலாளர் மகாலிங்கம்,முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் ராமலிங்கம, முன்னாள் நகர செயலாளர் முருகன்,தீபா ஆதரவு மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் புவனகிரி தொகுதி ஒருங்கிணைப்பாளர் கட்சி அலுவலகத்தில் நீர்,மோர் பந்தல் துவக்கி வைத்தார்.மேலும் புதிய பேருந்து நிலையத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.அரசு ஆரம்பசுகாதாரநிலையத்தில் உள்ள நோயாளிகளுக்கு பழம்,பிஸ்கட் போன்றவை வழங்கப்பட்டது.அதிமுக ஓபிஎஸ் வார்டுசெயலாளர்கள் மதியழகன்,லிங்குசாமி,குணசேகரன்,சசிகலா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக