உங்கள் பகுதி செய்திகளை உடனடியாக உலகின் பார்வைக்கு அறியவைக்க தொடங்கப்பட்டதுதான் இந்த இதழ்.விரைவாக செய்திகளை அனுப்பி சரியான தீர்வினை பெற்றிட வேண்டுகிறோம்.

Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com - Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com -Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

சேத்தியாத்தோப்பு நகரில் மனநலம் பாதித்தவரின் அட்டகாசம் அதிகரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை




சேத்தியாத்தோப்பு,பிப்.25:

சேத்தியாத்தோப்பில் கடந்த சில  நாட்களாக மனநலம் பாதித்த ஒருவரின் செயல்பாட்டால் பொதுமக்கள், பயணிகள், வாகன ஓட்டுநர்கள் என பலரும் சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள்.சேத்தியாத்தோப்பு வடக்கு மெயின்ரோட்டில் வசித்து வரும் மைனர் மகன் அண்ணாதுரை(28).இவருக்கு குடும்ப சூழல் காரணமாக மனநலம் பாதித்ததாக கூறப்படுகிறது.இதனையடுத்து அவரது குடும்பத்தினர் அவருக்கு வெளியூரில் சிகிச்சையளித்து வருகிறார்கள்.தற்போது வீட்டிலிருக்கும் அண்ணாதுரை திடிர்,திடிரென சேத்தியாத்தோப்பு கடைத்தெருவில் நடமாடுகிறார்.வாகனங்களுக்கு குறுக்காக செல்வது, செல்லும் வாகனங்களை வழிமறிப்பது போன்றவற்றை செய்கிறார்.மேலும் சில நாட்களுக்கு முன் கடைத்தெருவில் வடக்குமெயின்ரோட்டில் உள்ள ஒரு வங்கி ஏடிஎம்மை சேதப்படுத்தியும், மற்றும் சென்னையிலிருந்து கும்பகோணம் செல்லும் அரசுப்பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்தும் உள்ளார்.அவரை காவல் துறையினர் அவ்வப்போது கண்டித்து எச்சரித்து அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைத்து வருகிறார்கள்.ஆனாலும் இது தொடர்ந்து நடக்கிறது.இதுகுறித்து சேத்தியாத்தோப்பு வணிகர் சங்கத்தினர் தெரிவிக்கும்போது இவரால் பலருக்கும் சிரமமாக இருக்கிறது.கனரக வாகனங்கள் உள்ளிட்டவைகளை திடிரென்று முன்னால் சென்று மறைப்பதால் விபத்தும் ஏற்படும் அபாயமும் உள்ளது.பொதுமக்களுக்கு இடையூறா£கவும் இருந்து வருகிறார்.அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக