ADD1
பார்வையாளர்கள்
சனி, 1 அக்டோபர், 2016
ஸ்ரீமுஷ்ணம் புதிய ஒன்றியத்தில் பரபரப்பாக வேட்பு மனுதாக்கல்
தமிழக உள்ளாட்சித்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அனைத்து இடங்களிலும் விறுவிறுப்பாக உள்ளாட்சி பிரதிநிதிகள் வேட்பு மனுதாக்கல் செய்து வருகிறார்கள்.ஸ்ரீமுஷ்ணம் புதிய ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சிமன்றத்தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு வெள்ளிக்கிழமை வரை பல்வேறு கட்சிகளை சேர்ந்தோர் மனுதாக்கள் செய்தனர்.இதன்படி மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் இரண்டுபேர், பாமக ஒருவர்,தேமுதிக ஒருவர்,விசிக ஒருவர், தவாக ஒருவர், அதிமுக மூன்றுபேர் சுயேட்சை ஒன்று என பத்துபேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.இதுபோல் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக பதினோருபேர், பாமக ஆறுபேர், தேமுதிக இருவர், பாஜக ஒருவர், விசிக இருவர், மதிமுக ஒருவர்,சுயேட்சை பதிமூன்றுபேர் என முப்பத்தியாறு பேர் விருப்ப மனுதாக்கல் செய்துள்ளனர்.ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு 152 பேர் மனுதாக்கள் செய்துள்ளார்கள்.சனி கிழமை யாரும் மனுதாக்கல் செய்யவில்லை.
சேத்தியாத்தோப்பு பேரூராட்சி
புவனகிரி ஒன்றியத்தில் உள்ள சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் பதினைந்து வார்டுகளுக்கு மனுதாக்கல் விவரம்.
சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது.இந்த வார்டுகளில் உள்ள கவுன்சிலர் பதவிக்கு வெள்ளிக்கிழமை வரை விருப்ப மனுதாக்கல் செய்தவர்கள் விவரப்படி தேமுதிக ஒருவர், பாமக ஒருவர், சுயேட்சைகள் பதிமூன்று பேர் என பதினைந்து பேர் விருப்பமனுதாக்கல் செய்துள்ளனர்.நேற்று சனிக்கிழமை என்பதால் யாரும் மனுதாக்கல் செய்யவில்லை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக