உங்கள் பகுதி செய்திகளை உடனடியாக உலகின் பார்வைக்கு அறியவைக்க தொடங்கப்பட்டதுதான் இந்த இதழ்.விரைவாக செய்திகளை அனுப்பி சரியான தீர்வினை பெற்றிட வேண்டுகிறோம்.

Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com - Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com -Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com

சனி, 1 அக்டோபர், 2016

உலர்ந்த உதடுகள் உலர்ந்த உதடுகள்

 

இரத்தின.பூராசாமி,சேத்தியாத்தோப்பு

இதயத்தின் விளிம்பிலிருந்து வெளிப்படும், எண்ணங்களும் ஏக்கங்களும், சிந்தனை சிதறலாக வெளிப்படுகிறது.அவை ஒருகட்டத்தில் சாதனை என நினைத்து வேதனையில் சிக்குககின்றன.வேகமாக முன்னேறுவதாக நினைத்து அதே வேகத்தில் பின்னோக்கி வேகமாக நகருகின்றன.இவைதான் மனித இனம் எனப்படுவது.குடிகாரன் போல தள்ளாடும் மனிதன் இனம் நல்லதை நினைத்து சிந்தித்து செயல்படமுடியாமல் இருக்கிறது.ஒரு இயந்திரம்போல பழுதாகியும் சில நேரத்தில் இருக்கிறது.இந்த பூமியின் வேகத்தையும் தாண்டி அதில் வாழும் ஆறறிவு மனித இனம் வேகமாக செல்ல முயற்சிக்கிறது.ஆனால் அது அழிவைநோக்கிய பயணம் என்பது நிதர்சனமான உண்மை.ஒரு மரத்திலிருந்து ஒடிந்து விழும் கிளைக்காக மரமானது மர கிளை ஒடிந்து விழுந்துவிட்டதே என்று வருத்தப்படுவதில்லை. வேதனையில் கிடப்பதில்லை.மரத்தை வெட்டியவனை பழிவாங்க நினைப்பதும் இல்லை.மாறாக அவனுக்கு நல்ல காய் கனிகளை தந்து உதவுகிறது.
ஆனால் இந்த சமுதாயம் அப்படியா இருக்கிறது? பொறாமை, சூது, வஞ்சகம்,தந்திரம், தற்புகழ்ச்சி, பிறர் துன்பபட்டால் இன்பம் காண்பது என அல்லவா மகிழ்ச்சியுடன் இருக்கிறது.குளற்றில் முளைத்துள்ள தாமரை இலைக்கு கீழே உள்ள மீனை எப்படி எளிதாக பிடிக்கிறார்களோ அப்படி எவரை ஏமாற்றலாம் , சுரண்டலாம் என்பதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது.இதுவே கொள்கையாக கொண்ட மனிதர்கள் வாழ்கிறார்கள்.பட்ட நிலா வானத்தில் வருவது கூட சில குட்டி நிலவுக்கு பிடிப்பதில்லை.இளமை ஒதுங்க இருட்டுக்கள் தேவைதானே!
கரும்பை தின்று விட்டு சக்கையாக விட்டுஎறிவதுதானே மனிதர்களின் பழக்கம்.இதுபோல எத்தனை எத்தனை இளம்பூக்களின் வாழ்க்கைகள் கேள்விக்குறியாகி உள்ளது.சொற்களின் அலங்காரத்தில், தற்புகழ்சியினாலும் யாரோ ஒருவரிடம் தங்களை இழக்கிறார்கள்.இப்படிப்பட்ட பெண்கள் தங்களுக்கான வாழ்க்கை துணையோடு வாழ முற்படும்போது அனுபவிக்கிற இன்னல்கள் எத்தயெத்தனை!இவர்கள் தன்னை தொட்டவனிடமும் வாழாமல், கரம்பிடித்தவுடனும் வாழ முடியாமல் நூலறுந்த பட்டமாய் இருக்கிறார்கள். மருந்து என நினைத்து கசப்பான கஷாயத்தை குடித்தவாறு அல்லவா அவர்கள் வாழ வேண்டியுள்ளது.இயற்கையின் வரப்பிரசாதமாக எத்தனையோ படிப்பினைகளை தருகிறது.அதனை மனிதர்கள் பார்ப்பதும் ரசிப்பதோடும் சரி.கடற்கரை மணலில் குளிர்ச்சியாக வீசும் காற்றுக்காக எத்தனையோ மனிதர்ள் கூடி கூட்டமாக நிற்கிறார்கள்.
நடுக்கடலில் அலைகள் இல்லை.ஆனால் கரையை நோக்கி வரும்போது பாவத்தின் சின்னங்களாக நாட்டையும், வீட்டையும் நாசம் செய்யும் மனிதர்களையும் கரைக்கு வரும்போது அடித்துகொண்டுபோகிறதே! இவை பூபாளம் புனிதம் பெறவேண்டும் என்ற எண்ணத்திலேயே அலைகள் பெரும் சீற்றத்தோடு கரைக்கு வருகிறது.ஆனால் மனிதர்கள் சாமர்த்தியமாக தப்பித்துவிடுகிறது.பெரும் கூட்டத்தினர் திரளாக கூடி மீன்களை ஏலம் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.சில மீன்கள் உயிருக்கு போராடுகிறது.மனிதன் இறந்துவிட்டால் ஊரே கூடி ஒப்பாரி வைக்கிறது.அதுவே தினம் , தினம் விதவிதமாக லட்சக்கணக்காக மீன்களினம் செத்து மடிகிறதே இதனை யார்கேட்பது?மனிதம் இனம் செத்தால் ஒரு நீதி?  எங்களினம் செத்தால் ஒரு நீதியா?
கற்கள் கூட்டம் பேசும் சிற்பமாக மாறுகிறது.கற்சிலைகள் பேசும் தெய்வங்களாக இருக்கிறது.ஆனாலும் சில கற்கள் மறைக்கப்படுகிறது அரணாக கடலின் ஓரங்களில் கொட்டப்படுகிறது.அப்போது பாழாய்போன மனித இனம் தன்மேல் கால்வைக்ககூடாது என்று, தன்மேல் கால்வைப்பவர்களை பாசம் பிடிக்கவைத்து வழுக்க வைக்கிறது.கடல் அலைகள் நுரை எனும் வெண்முத்துக்களை கரையில் கொட்டியதும் சில நிமிடங்களில் விற்று தீர்ந்துவிட்டது என அது மறைந்து விடுகிறது.கடலலைகளோ பெரும் சத்தத்துடன் ஓங்கி உயர்ந்து பெரும் இரைச்சலோடு தன்கடமைகளை தவறாது செய்தன.தேவையில்லாத சிப்பிகளும்,கிளிஞ்சல்களும் அங்கொன்றும், இங்கொன்றுமாக
சிதறிகிடந்தன.இதே கடற்கரை மணலில் ஒருபக்கத்தில் தன்னை ஈன்றவர்கட்கு ஐயர் வைத்து ஈமச்சடங்குகளும் நடந்தன.இளம் சிறார்களோ அவர்களுக்கு தேவையான பஞ்சுமிட்டாய், பந்து என கேட்டு நச்சரித்து கொண்டிருந்தார்கள்.நிறைந்து விட்ட அங்காடிகளில் கூட்டம் அலைமோதி விற்பனை அதிகரித்தது.
வாழ்வா? சாவா? என கடலுக்கு சென்ற மீனவர் படகுகள் கரைக்கு திரும்பின.அதில் ஒரு படகு உடைந்து மூழ்கியதால் அதிலிருந்தவர்கள் கடலில் தத்தளித்துகொண்டிருந்தார்கள்.உயிருக்கு பெரும்போராட்டம் நடத்தினார்கள்.விதியோ அவர்களை வேடிக்கை பார்த்தது.மீனவர்கள் படகுகளை கரைக்கு ஒதுக்க முயற்சித்தனர்.அலைகளோ படகுகளை கடலுக்குள் இழுத்தவண்ணம் வேடிக்கையாக இருந்தன.
வான வெளியில் கருடனும் ,பருந்தும் கீழே கிடைக்கும் இரைக்காக வட்டமிட்டன.வண்ணம் குழைந்த கார்குழலிபோல இளம் வயதில் இதையத்தை பறிகொடுத்த ஏக்கமும், துக்கமும் கொண்டவளாக அவள் இருந்தாள்.கடற்கரை வெய்யலில் தப்பித்து படகின் மறைவில் அவள் அமர்ந்திருந்தாள்.அமர்ந்திருந்தாலும் அவளது முகத்தில் சோகத்தின் நிழல் அதிகமாக தென்பட்டது.அவள் வாழ்க்கையை பறிகொடுத்தவளா? அல்லது விதைவையா? மேலும் காதலில் தோல்வியடைந்தவளா?கழுத்தில் மாங்கல்யம் என்பது இல்லையே? எதை வைத்து அவளை நிர்ணயிப்பது? முடிவு தெரியாதநிலை.
செண்டக்குழம்பின் நிறமும், செம்மாதுளை நிறமும் குழைந்த நிறமும் கொண்டதாக அவள்மேனி.அன்று மலர்ந்த ரேரஜாபோல உதடுகளும், ஐயிரமீன் போன்ற கண்களும்,அதில் கரிய நிறமுடன் கூடிய ரோமங்களும் கொண்ட புருவங்களும் இருந்தது அவளுக்கு.முகம்,நெற்றி  மூன்றாம் பிறைபோன்றும்,மாம்பழக்கன்னங்களும், முத்துக்களை கோர்த்ததுபோன்ற பல்வரிசையும் அவளை தேவதைகளின் அரசிஎன்றது.
அவளின் கத்தரிப்பூபோட்ட ஜாக்கட், மார்பகங்களின் இளமையின் வனப்பை எடுத்துக்காட்டியது.வாடாமல்லி சேலையோ அவள் உடலுக்கு புது மெருகூட்டியது.இத்தனை அழகுடையவளுக்கு ஏனிந்த சோகம்? எதற்கு இந்த கோலம்? வாடியமுகத்துடன் இருப்பது ஏன்?
அனிச்சமலர் வாடி வதங்கி தரையில் விழுந்து, பலரின் காலடி மிதிபட்டு சுங்கி கிடப்பதுபோலஇருப்பதின் மர்மம் என்ன? ஈரப்பசை காணாத தலைமுடி வரண்டு காற்றில் அங்கும் இங்கும் பறக்கும் அவளின் செறிந்த நீளமான அங்குமிங்கும் பறந்து அவளது முடி முகத்தை மறைப்பது ஏன்?கவலையினால் ஊண் உறக்கமின்றி அவளது முகம் வீக்கம் கண்டிருந்தது.
மதிவதினியின் கட்டுப்பாட்டை மீறி அவளது உடலிலுள்ள சேலை காற்றில் அலைபாய்ந்தது.அதே நேரம் கட்டறுத்து பாயும் தன்மனதுக்குள் அவள் அடிமையாக தோன்றினாள்.கருமேகங்களோ வானத்தை வளைத்து முற்றுகையிட்டன. சூரியனுக்கும், பூமிக்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டதுபோல தோன்றச்செய்தது. ஏனெனில் அப்போது மேக கூட்டங்களின் கரிய நிறம் சூரியனையே விழுங்கி விடுவதுபோல இருளை அப்பியபடி இருந்தது.
வானில் கட்டுக்குலையாத மேகக்கூட்டம்போல அவளது நெஞ்சத்தில் கட்டுக்கடங்காத சோகக்கூட்டங்களும் இருக்கத்தான் செய்தது.செண்பகமலர்களாலும், செம்பருத்தி மலர்களாலும், செவ்வாழையான அவளது மேனி சீரழிந்து காணப்பட்டது.கிரேக்கத்தின் அற்புத சிலைபோல அவள்தோற்றத்தில் அமர்ந்திருந்தாள்.அவளின் செந்தாழை உதடு திறந்து ஒரு மெல்லிய புன்னகைகூட காணும்.எப்போதோ அவளது உதடுகள் காய்ந்து வரண்டுபோய்விட்டது.இதயத்தில் தவிப்பு கண்ணீராக மாறி அவளது இமைகளையும் தாண்டி வழிந்தோடியது.அப்போது தனது சேலையின்முந்தானையால் அதை துடைத்து வழித்தாள்.இது கண்ணீரை வடியசெய்யும் முயற்சியாக இருந்தாலும் இதனால் அவளின் சேலை முழுவதும் நனைந்து காணப்பட்டது.
அசோகவனத்து சீதைபோல சோகத்தில் கண்ணீரால் நனைந்த சீதையின் மேலாடை, அவளது சோகம் ததும்பிய பெரும்மூச்சாலட அந்த மேலாடை உலர்ந்ததுபோல இங்கே அமர்ந்திருக்கும் மதிவதனியின் ஆடைகளும் உலர்ந்திருந்தது.கருமேகங்களில் இருந்து மெல்லிய தூறல் விழுந்தது.அவள் அமர்ந்திருந்த படகிலும் சொட்டு, சொட்டாக மழை நீர் விழுந்தது.மழை துளியோ மதிவதனியின் «£சகத்தில் தானும் பங்கு கொண்டதாக நினைத்தது.ஆனாலும் அவளின் இதயத்தின் இறுக்கம் மட்டும் தளர்ந்தபாடில்லை.
காதுகேட்காத வானம், கண் தெரியாதமேகம்,துன்பம் கண்டுதுவளாத பூமி, வஞ்சகம் அறியாத காற்று இவற்றின் நடுவே உடம்பு நிற்பது உயிரின் ஸ்தூலத்தில்தானே!மனிதரின் உயிர் நம்பிக்கையின் பலத்தில்தானே!கொழிக்கும் நுரைகளோடும், ஆர்பரிக்கும் அலைகளோடும், தடுமாறும் படகுபோலத்தானே வாழ்க்கை!புரிந்துகொள்ளாத மனிதர்களைப்போல மதிவதனி இருப்பால்போலும்.கண்ணீரின் தாய்மொழி அழுகைதானே! அதுபெரும்பாலும் பெண்களிடமேதானே அடைக்கலமாகியுள்ளது. ஆனபோதிலும் சோகத்தின் சாயலில் துவண்டவளாக இருந்தாள்.
வீசும் தூறலோடு காற்றும் கலந்தடிக்கவே கடற்மணல்பரப்பில் அமர்ந்திருந்தவர்கள் புகலிடம் தேடி தாங்கள் நணையாதிருக்க வழிகண்டனர்.மதிவதனியோ முழுக்க நனைந்தவளுக்கு முக்காடு எதற்கு என்பதாக இவள் இந்த மழையில் தனது உடலோடும் உள்ளத்தையும் நனைத்து அதன் வெப்பத்தை,குமுறலையும் குறைக்க முயன்றாள்.அந்த வேளையில் உடலும், அவளது ஆடைகளும் நனைந்ததே தவிர உள்ளத்தின் குமுறல் கரையாமல் இருந்து.அவள் மெதுவாக எழுந்து நடக்க முயன்றாள்.
அவளது கால்கள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.அப்போது கடற்மணற்பரப்பினையே திரும்பி, திரும்பி பார்த்து நடந்தாள்.அந்த நேரத்தில் அவளது முகத்தில் ஆயிரம் மின்னல்கள் வெட்டிச்சென்ற சோகத்தின் வடு இருந்தது.கொதிக்கும் தணலாகவும் கோலோச்சியது.உழைக்கும் தொழிலாளியின் ஏகாம்பரத்தின் மகன் .இவனிடம் மதிவதனி அன்பு காட்டினாள்.அவன் பித்துவேறாய் பிடித்தது.உள்ளத்தில் உள்ளதை மறைக்காமல் சொன்னான்.மதிவதனி கேட்டாள்.அப்போது என் வாழ்க்கை அற்ப ஆயுளுக்கு ஆளாக்கப்பட்டவன்.எந்த நேரத்திலும் என்வாழ்க்கை அஸ்தமனமாகலாம். எப்போது எனது விதி முடியபோகிறதோ? என்ற நினைவே என்னை சிறுக, சிறுக கொன்று போட்டுவருகிறது. எனவேதான் கூறுகிறேன் நீவாழவேண்டியவள்.உனக்கு பிடித்தவளை மணந்துகொண்டு நிலையான நிம்மதியான வாழ்க்கையை துவங்கு.என்று எப்படியெல்லாமோ கூறி மதிவதனியின் மனதை மாற்ற முயற்சித்துப்பார்த்தான்.
அவள் கூறினாள்.ஒருநாள் வாழ்ந்தாலும் உன்னோடுதான் வாழ்வேன்.ஒருவளை எந்த பெண்தொட்டாலும் அவனை கடைசிவரை எந்தப்பெண்ணும் மறக்கமாட்டாள்.இதை மறைத்து வேறொரு ஒருவனை திருமணம் செய்துகொண்டாலும் முடிவில் அவளுக்கு முதலில்தொட்டவன் நினைவே வரும்.இதயத்தில் நங்கூரமாக பதிந்தும் இருக்கும்.நான் அப்படிப்பட்ட வாழ்க்கையை விரும்பவில்லை.தொட்டவனோடு தொடர்ந்து போவதுதான் பெண்மைக்கு இலக்கணம்.
என் விதி இப்படிதான் என்றால் அதை யாரால் மாற்றமுடியும்?இறைவன் போட்ட முடிச்சை யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.என உறுதியாக கூறிவிட்டாள் மதிவதனி.மதிவதனியை மாற்ற முயன்ற ஏகாம்பரம் பலமுறை தோற்று போனான்.சுகமான வாழ்க்கை என்பது ஒருவரையொருவர் புரிந்துகொண்டு,புனிதமான பாசமும், பிடிப்பும்கொண்டவர்களாக வாழ்ந்தனர்.
கடல் நீர் கரையை அரிப்பதுபோல அவன் இதயம் நோயினால் அறிக்கப்பட்டுக்கொண்டிருந்தது.இது அவனை சிறுக, சிறுக சக்தியற்றவனாக்கிகொண்டே வந்தது.அவர்களின் சுத்தமான,சுகமான வாழ்க்கையில் சோதனைகள் வெறியாட்டம்போடத்துவங்கியது.அப்போது ஏகாம்பரம் இப்படியாக நினைத்தான்.என்விதி முடிந்துவிடுமோ? அப்படி நேர்ந்தால் மதிவதனியால் தாங்கிகொள்ள முடியுமா? என்று வெந்து நொந்துபோவான்.ஆனாலும் காலன் கணக்கை முடித்துவிட்டான்.நினைத்ததுபோலவே அவன் விதிமுடிகிறது.மதிவதனியோ அடித்துப்பிடித்து அல்லோகலப்படுகிறாள். அவளின் அங்கங்கள் அய்யோ வாரிக்கொடுத்து விட்டேனே! என அழுது புலம்புகிறாள்.கொட்டும் மழையிலும், கொடும் வெய்யிலிலும் காத்துவைத்து வாரிக்கொடுத்துவிட்டேனே!எப்படியெல்லாமோ பா-துகாத்தேனே இனி என்ன செய்யப்போகிறேனோ?
நாங்கள் இல்லற வாழ்வில் இனிதாக மலர்வது அந்த இறைவனுக்கே பிடிக்கவில்லையா? அவன் தான் சந்நியாசிச்சே!மயான சாம்பலை பூசிக்கொண்டு தவம் இருக்கும் ஈசனுக்கு என்ன தெரியும்?இல்லற வாழ்க்கை என்றால் என்வென்று புரியுமா? உடுக்கையடித்துக்கொண்டு ஊர்ஊராக ஓடும் ஓடுகாலிதானே அவன். நான் கணவனை பறிகொடுத்துவிட்டு வாழ்வதின் வேதனை அவனுக்கு எங்கே தெரியபோகிறது? வேதனையில் துடித்தவள் கண்ணீரை துடைத்தாள்.அப்போது அவனின் கையில் இருந்த கடிதத்தை எடுத்து அவரஅவசரமாக எடுத்து பிரித்து படித்துபார்த்தாள் மதிவதனி.
இறந்துபோன ஏகாம்பரம் இப்படியாக
எழுதியிருந்தான்.....
   என் உயிரின்மேலான மதிவதனிக்கு..இக்கடிதத்தை நீபடிக்கும்போது எனது ஆவியானது எங்குள்ளது என்று எனக்கு தெரியாது.அழுது புரள்வாய், ஆத்திரம்தாங்காமல் புழுவாக துடிப்பாய்.என் பிரிவை தாங்கிகொள்ளும் சக்தி உனக்கில்லை.இது எனக்கும் தெரியும்.விதி யாரை விட்டது.கடும் சூறைக்காற்றிற்கும், கடுந்தணலாக அடிக்கும் வெய்யலுக்கும் யாரால் தடைபோடமுடியும்?
என்பயணம் உனக்கு புயலாக தோன்றலாம்.இவ்வளவு காலம்தான் பூலோக வாழ்க்கை என்று இறைவன் எனக்கு வரையறை செய்துள்ளான்.நான் செல்வது புணித யாத்திரை அல்ல என்பது உனக்கு நன்றாகவே தெரியும்.உனது பூஜை அறையியல் வணங்கும் குத்து விளக்காக நான் இருப்பேன்.விளக்கு அணைந்துபோகாமல் இருக்க சுடருக்கு சொல்லி கொளுத்தி எண்ணையே போய்விட்டபின் சுடர்விட்டு எரிந்தால் என்ன? சுடர்விட்டு எரியாமல்போனால் என்ன? எனநினைப்பாய் என்காதலியே!கற்பனையின் நீரூற்றே புலம்பாதே கண்ணீரை துடைத்துகொள்.எதுவும் நம்கையில் இல்லை.முன்பொரு சமயம் நாம் சந்திக்கும் இடத்தில் நீ வரமால்போனதால் நான் அனாதையாக புலம்பிக்கொண்டிருந்த நான் உனது கூந்தலில் இருந்து விழுந்த மல்லிகை பூக்களை மடியோடு வாரி எடுத்து, மார்போடு அனைத்து விடிய விடிய கற்பனை உலகத்தில் சஞ்சரித்தேன்.கண்கொத்தி பாம்பாக பலர் பார்த்ததால் என்னால் வர இயலவில்லை. நீங்கள் ஆண் பயப்பிடத்தேவையில்லை.நான் பெண்ணாயிற்றே என்று என்னிடம் பதிலுரைத்தாய்.
கடிதத்தை படித்தவள் நெஞ்சின் குமுறலை அடக்கமுடியாமல் வாய்விட்டு கதறினாள்.எப்படியெல்லாம் தங்கள் வாழ்க்கை அமையவேண்டும் என்று கட்டிய கோட்டைகள் செதில் செதிலாக உடைந்துபோய்விட்டன.இடை, இடையே துக்கம் அவளது தொண்டையை அடைத்தது.
மீண்டும் கடிதத்தில் அவள் பார்வை...
சுத்த தங்கத்தில் நகை செய்தால் ஜொலிக்காது என்பதால் ªÊம்பு கலந்து பட்டை தீட்டும் தங்கமாக எனக்கு கிடைத்தவள் நீ! செம்பிற்குகூட தகுதியற்ற என்னை பளிச்சிட வைத்தாய்.ஆலய மணி அடிக்கும்போதெல்லாம், மாதாகோவில் மணி கேட்கும்போதெல்லாம் என்கணவரை வாழவிடு...என்கணவரின் நோயை குணமாக்கு என்று அங்கபிரதட்சனம் செய்கிறேன் என கரம்கூப்பி வணங்கினாய்.
இப்போது அந்த ஆண்டவனும் கைவிட்டுவிட்டானே என ஆத்திரம் கொள்வாய்.ஒருவர் இவ்வுலகில் வாழ வயிற்றுக்கு உணவு தேவை.அதையும் தாண்டி உணர்வு.அதற்கு தேவை காதல்.இந்த காதல் உணர்ச்சிகளுக்கு தேவை காமம்.பதறி..பதறி..கதறி அழுதாள்.நாம் சந்திக்கும் இடத்தில் ஆலமரம் ஒன்று ஆணிவேர் இல்லாமல் விழுதுகளின் தாங்குதலில் நின்றனவே அதை நீ காட்டி ஆணிவேர்தான் இல்லை என்றாலும் உற்றார் உறவினர், பெற்றோர் துணையோடு வாழ்வதுபோல நீமுயற்சி கொள்.
தனிமையில் தத்தளிக்காதே கயவர்கள் பழிபோடுவார்கள்.கலை வண்ணம் தொடடாத இடமெல்லாம் கடல்நீர் தொட்டதுபோல எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் விதிக்கு விலக்காக முடியாது.இது உலகறிந்த உண்மை.சில நாட்கள் உறக்கமின்றி நான் இருப்பதை கண்ட நீ உனது கைளால் எனது தலைமுடியை கோதி எனை தூங்கவைப்பாய்.காதலின் துயரம் கண்களால் அளந்து கண்களோரம் சிதறிய கண்ணீரை நானறியாபொழுதில் துடைத்துக்கொள்வாய்.இவனோடு கரைசேருவோமா? அல்லது கடலோடு மூழ்கிப்போவோமா? நீ யோசித்தையும் நானறிவேன். நான்கேட்டபோது ஆண்டவனிடம் உயிர்பிச்சைக்காக யாசிக்கிறேன் என்றாய்.பேசும் தெய்வத்தினாலேயே எனை காப்பாற்ற முடியவில்லை.பேசாத தெய்வங்களா வந்து என காப்பாற்றபோகிறது?
பூக்கள் பூங்காற்றால் விழும்போது பூகம்பம் வந்துவிட்டதாக நினைக்க கூடாது.நம்பிக்கை வேண்டும்.எதையும் தாங்கும் குணக்குன்று நீ! என்றாலும் பிரிவை தாங்கிக்கொள்ளும் பக்குவத்தை நீபெற்றிட வேண்டும்.இனி என்ன செய்யப்போகிறோம்? எப்படி வாழபோகிறோம் என நினைக்காதே மதிவதனி!தடங்கள் கூட அழிந்துபோகலாம்.நமது காதல் கீதங்கள் ,நினைவுகள் மட்டும் அழியாது.கடந்த காலங்கள் அதில் நாம் கடந்திட்ட நிம்மதியான சூழலும் எண்ணங்களை இதயங்களை பறிமாறிக்கொண்டோம். என் நெஞ்சிலே முகம்புதைத்து நீ சாய்ந்தபோது இருக தழுவி இரு கன்னங்களில் மாறி, மாறி முத்தங்கள் பதித்தாய். அப்போது உன் கண்கள் கண்ணீரால் கசிந்தன.
ஏன் இவ்வாறு உனது கண்கள் கசிகின்றன என நான் கேட்டபோது நீ உங்கள் நெஞ்சமே பஞ்சு மெத்தை.இந்த நிலையே நீடிக்க செய்திடவேண்டும் என இறைவனிடம் வேண்டினேன் அதனால் ஏற்பட்ட ஆனந்த கண்ணீர் என்றாயே....! அத்தனை ஆண்டவனும் கைவிட்டுவிட்டானே என கலங்குவாய்..கடவுளாவது பூதமாவது அத்தனையும் பொய் என்று கலங்குவாய்...கர்ச்சிப்பாய்.
அவளின் ஆத்திரமும் துக்கமும் கலந்த அவளின் இதயத்திலிருந்து வெப்பமாய் வெளியேறியது கண்ணீர்.கணவர் உள்ளபோதே நஞ்சுசொற்களை அள்ளி வீசும் இந்த சமுதாயத்தில் அவர் இல்லாமல் தனி ஒருவளாக எப்படி வாழப்போகிறேன்? சலனமற்ற சித்திரமாக...சத்தமற்ற வாத்தியமாக ....நாமறுந்த வீணையாக நான் அய்யோ....என கண்ணீரில் மிதந்தாள் மதிவதனி.
வானம் இடிந்தாலும், இந்த பூமி பிளந்தாலும் வாழ்ந்து காட்டுவோம்  என்றாயே...ஐயோ பாழும் இடியொன்று இந்த பாவி தலையில் விழுந்துவிட்டதே...அவள் படிக்கும்போது இடையிடையே எழுத்துக்கள் சிதறுண்டு காணப்பட்டன.படிப்பதற்கு எழுத்தே புரியாமல் தடுமாறினாள்.தலை எழுத்தே தெரியாமல் போனபோது, படிப்பதற்கு எழுத்துக்கள் தெரியாமல் கண்ணீர் மறைப்பது பெரிதா?
அவளுக்கு தெரியவில்லை.கண்களைத்துடைத்தவாரே படிக்கத்துவங்கினாள்.மொட்டுக்களை தென்றல் உடைத்து விட்டதற்காக தென்றல் செடியிடம் மன்னிப்பு கேட்பதில்லை.இருந்தாலும் என் உயிருக்கு உயிரான மதிவதனி எனை மன்னிப்பாயாக ...வாழவேண்டியவள் நீ! உன்வாழ்க்கையை கெடுத்தவன் நான். என்பிரிவால் நீ சோகத்தில் ஆழ்ந்துவிட்டால் வாழ்க்கை சக்கரம் ஸ்தம்பித்துவிடும்.மறப்பது இயலாத காரியம்தான்.என்ன செய்ய-? நீ மறந்துதான் ஆகவேண்டும்.
பனித்திரள் கதிரவனை கண்டு மறைவதில்லையே..என்ற நிர்ப்பந்தத்தில் உனை விட்டு செல்கிறேன்.தாங்கிகொள் முடியாதுதான். நீ தவிப்பாய், தத்தளிப்பாய் நிலைகுலைந்துபோவாய் , நிம்மதி இழப்பாய் நிலை தடுமாறுவாய் .வண்டி ஓடும்போது அச்சாணி விழுந்துவிட்டதே என அழுது புலம்புவாய்.ஆர்ப்பரிக்கும் கடல் அலையைக்கண்டு பயப்பிட்டால் ஆழ்கடலை கடப்பது கடினம்.என்பதை இனிதான் நீ உணர்ந்துதுகொள்.தைரியமும் கொள். மதிவதனி சிவக்க சிவக்க சுட்டுவிட்டதற்காக தங்கத்திடம் நெருப்பு மன்னிப்பு கேட்பதில்லை.என் உயிரே நான் உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன்.இடியும் மழையும் இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை. மழைக்கு வாய் திறக்கும் இடியை எளிதாக எடுத்துக்கொள்ளவில்லையா? அப்படிதான் நீ எடுத்துக்கொள்ளவேண்டும்.மின்னல் தோன்றி மறைவதில்லையா? அதுபோல எடுத்துக்கொள்ள வேண்டும்.
மதிவதனி நீ எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும். என்னை பூமியில் புதைக்காதீர்கள் ஏனெனில் இன்னமும் எத்தனையோ உயிர்களுக்கு இடம்வேண்டியுள்ளது. ஒருவர்க்கு எனது பிணக்குழியை விட்டுக்கொடுத்தேன் என்ற பெருமை கிடைக்கட்டும்.வாய் விட்டு அலறி தாயை கட்டிக்கொள்ளும் குழந்தையாக அவன் நெஞ்சிலேமுகம் புதைத்து அழஆரம்பித்தாள் மதிவதனி. கண்கள் சிவக்க, கண்ணில் கனல் தெறிக்க அவன் நெஞ்சோடு தனது நெஞ்சை புதைத்து கட்டியணைத்து உலர்ந்த அவனது உதடுகளில் முத்தம்பல கொடுத்து உச்சி நுகர்ந்து ஓயாத கண்ணீருக்கு என்னை ஆளாக்கி எட்டிக்காயாக எங்கோ சென்றுவிட்டாயே .....போய்வா எனது உயிரே என்று வெறுமையாக மதிவதனியின் உதடுகள் முனுமுனுத்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக