📡இன்றைய🚨முக்கிய📡செய்திகள் 26/03/16 !
தேர்தல் விமுறையை மீறி நெல்லைப் பொதுக்கூட்டத்தில் வாக்காளர்களை பணம் வாங்க தூண்டும் விதமாக பேசியதாக பிரேமலதா விஜயகாந்த்
வழக்கு பதிவு.
பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதியுங்கள் - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.
கம்யூனிஸ்ட்டுகள் கிங் ஆகவும் இருக்க முடியாது கிங்மேக்கராகவும் இருக்கக் கூடாது - தா பாண்டியன்.
வைகோ மீது நடவடிக்கை எடுக்க ராஜேஷ் லக்கானியிடம் திமுக புகார்.
தேமுதிகவிற்கு 500 கோடி பேரம் பேசப்பட்டதாக வைகோ கூறியது பற்றி முழு விசாரணை நடத்த வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திடம் பாமக சார்பில் புகார் அளிக்கப்படும் - அன்புமணி ராமதாஸ்.
ஈராக்கில் கால்பந்து மைதானத்தில் தற்கொலை தீவிரவாதி தாக்குதல் 30 பேர் பலி.
ஐஎஸ் தீவிரவாதிகளால் கோவாவுக்கு அதிக அச்சுறுத்தல் - உளவுத்துறை எச்சரிக்கை.
காங்கிரஸ் ஆட்சியால் அசாம் மாநிலம் மிகவும் பின்தங்கிவிட்டது - பிரதமர் மோடி குற்றசாட்டு.
மக்கள் நலக் கூட்டணியா ? கேப்டன் விஜயகாந்த் அணியா ?வைகோ கூறியதை மறுத்து பேசிய ஜி.ராமகிருஷ்ணன் .
தினத்தந்தி அதிபர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் இன்று திமுக தலைவர் கருணாநிதி மு.க.ஸ்டாலின் ஆகியோரை கோபாலபுரத்தில் சந்தித்துப் பேசினார்.
வைகோ இருக்கும் இடத்தில் கொந்தளிப்பு இருக்கும் - ஹெச்.ராஜா.
2ஜி ஊழல் தொடர்பாக கூறும் குற்றசாட்டுக்கு வழக்கு தொடுக்க தயாரா ? - மு.க ஸ்டாலினுக்கு வைகோ கேள்வி.
ஐதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தரை நீக்க வேண்டும் - ஜனாதிபதி பிரணாப்பிடம் யெச்சூரி வலியுறுத்தல்.
அனைத்து கட்சிகளுடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை: தேர்தல் செலவு கணக்கு குறித்து ராஜேஷ் லக்கானி விளக்கம்
கேரள சட்டசபை தேர்தல்: முதற்கட்டமாக 51 தொகுதி பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிவிப்பு.
விஜயகாந்த் பிரசாரத்திற்கு வருவார் தேமுதிக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் - பிரேமலதா விஜயகாந்த்.
மக்கள் நலக்கூட்டணியால் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும்: சீதாராம் யெச்சூரி.
என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜகான் தீவிரவாதி தான் ஹெட்லி மீண்டும் திட்டவட்டம்
அதிமுக திமுக வேட்பாளர்கள் பட்டியல் ஏப்ரல் மாதம் வெளியாகிறது.
மத மாற்ற தடை சட்டத்தை ரத்து செய்தது திமுக ஆட்சி - திமுக தலைவர் கருணாநிதி.
தமிழ்நாட்டில் வைகோவை போல சுயநலமிக்க தலைவர் யாருமில்லை: சிபி ராதாகிருஷ்ணன் .
கடலூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீமான் இன்று 2வது நாளாக ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.
சங்கரன் கோவிலில் பள்ளி மாணவியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்ற பாலிடெக்னிக் மாணவன் ரயில் நிலையத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்பு.
நடிகை கேஆர்.விஜயாவின் கனவர் திரு.வேலாயுதன்நாயர் இன்று கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மரணம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக