தோழர் சுப.உதயகுமார்(ரன்) அவர்களுக்கு....
தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய இனத்திற்கு எதிராக
# மீத்தேன் எரிவாயு திட்டம்,
# நியூட்ரினோ ஆய்வு திட்டம்,
# கெயில் குழாய் பதிப்புத்திட்டம்,
# பாறை வாயு திட்டம்,
# கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் அணுவுலை திட்டம்
உள்ளிட்ட நிறைய ஒடுக்குமுறைகள் இந்திய ஆளும் வர்க்கத்தால் கையாளப்படுகிறது...
அவற்றில் தென் தமிழக மக்களை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட கூடங்குளம் அணுவுலை திட்டத்தை எதிர்த்து கிட்டத்திட்ட ஒரு போரையே நடத்தியவர் நீங்கள், என்பதில் இங்கு யாருக்கும் சந்தேகம் இல்லை. அதற்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்ளும் இதே நேரத்தில உங்களுக்கு ஒன்றினை கூற கடமைப்பட்டு உள்ளோம்.
குஜராத் மாநிலத்தில் உள்ள காரக்பூர் அனுவுலையிலிருந்து கனநீர் கசிந்தது இன்று ஒட்டு மொத்த இந்தியாவையே அணு உலைக்கு எதிராக திரும்பி பார்க்க வைத்திருக்கின்றது.
சி.பி.எம் கட்சியின் முன்னாள் பொது செயலாளர் திரு. பிரகாஷ் காரத் கூட இனி இந்தியாவில் எந்த ஒரு அணுவுலை திட்டமும் வேண்டாம் என்கிறார்.
அனைத்திந்திய அரசியல்வாதிகளே அணுவுலைக்கு எதிராக குரலெழுப்பும் இந்நேரத்தில் தாங்கள் கட்சி ஆரம்பித்திருப்பதும், இராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதும் நீங்கள் எடுத்த போராட்டத்தின் மீது நாங்கள் இதுவரை வைத்திருந்த நம்பிக்கையை சுக்கு நூறாக உடைத்து விட்டது.
இந்திய ஏகாதிபத்திய திட்டங்களால் வெறுப்படைந்த தமிழக மக்கள் நோட்டாவிற்கு வாக்கு அளித்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தலாம் என்ற தவறான எண்ணத்தில் உள்ளனர்.
"நோட்டாவை பயன்படுத்துவது என்பது வேட்பாளர்களை எதிப்பதே தவிர அரசின் ஏகாதிபத்தியத்தை அல்ல,
எனவே தேர்தலை புறக்கணிப்போம்,
அதன் மூலம் இந்திய அரசாங்கத்திற்கு நமது எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம், அதுவே சரியான வழி"
என்று மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டிய நீங்கள் இராதாபுரம் தொகுதி மக்களிடம் சென்று எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்பது எந்த வகையில் நியாயமான ஒன்று...
ஒரு ச.ம.உ வால் அனுவுலையிலிருந்து மக்களை காப்பாற்ற முடியும் என்று மக்களை நம்ப வைப்பது சந்தர்ப்பவாதத்தின் உச்சத்தை தவிர வேரென்னவாக இருக்க முடியும்...
சில மாதங்களுக்கு முன்பு உங்களுக்கும் தோழர் முகிலனுக்கும் ஏற்பட்ட கருத்து உரசலில் அவர் சிறை சென்றபோது பொதுவாழ்வில் "தனிநபர் புரட்சி"? என்று தாங்கள் தங்களது முகநூலில் குறிப்பிட்டு இருந்தீர்கள்...
ஆனால் அவர் இன்று அரியலூர் மாவட்டத்தில் சுண்ணாம்பு ஆலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தேர்தலை புறக்கணிக்க சொல்லி பிரச்சாரம் செய்கிறார். அனால் நீங்கள் இராதாபுரம் தொகுதி மக்களிடம் வாக்கு சேகரிப்பு பிரசாரத்தை செய்கிறீர்கள்.
தேர்தலில் நீங்கள் வெற்றி அடைவீர்களா தோல்வி அடைவீர்களா என எனக்கு தெரியாது அனால் தோல்வி அடைந்தால் அத்தோல்விக்கு பிறகு உங்களை ஒரு போராட்டக்காரராய் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்பதே எங்கள் கேள்வி...
பிரபாகரன் சக்திவேல்,
தாய்மண் மீட்பு இயக்கம்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக