உங்கள் பகுதி செய்திகளை உடனடியாக உலகின் பார்வைக்கு அறியவைக்க தொடங்கப்பட்டதுதான் இந்த இதழ்.விரைவாக செய்திகளை அனுப்பி சரியான தீர்வினை பெற்றிட வேண்டுகிறோம்.

Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com - Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com -Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com

சனி, 2 ஏப்ரல், 2016

அவர் அப்படிதான்

PROMISING POINTS ABOUT VAIKO

வைகோ சிறந்த பேச்சாளர்:

1. திமுகவை விட்டு வெளியேறிய போது:

"கருணாநிதியை ஒழிக்காமல் விடமாட்டேன்.."

2. மீண்டும் கூட்டணியாக இணைந்தபோது:

"தலைவர் கருணாநிதி கட்சியை விட்டு பிரிந்து போனாலும், மன்னித்து ஏற்றுக்கொள்ளும் தாயுள்ளம் கொண்டவர்.."

3. அதிமுகவுக்கு தாவிய போது:

"அன்புச் சகோதரி ஜெயலலிதாவின் நல்லாட்சி மலர பாடுபடுவேன்.."

4. முதல் முறை விலகிய
போது:

'"பாசிச ஜெயலலிதாவின் ஆட்சியை ஒழிக்காமல் விடமாட்டேன்.."

5. பாஜகவை ஓடிச்சென்று தமிழகத்திற்கு கூட்டி வந்த போது:

'"மோடி வந்தால் தமிழகத்தில் சுவிட்சை போடாமலே கலர் கலர் பல்புகள் எரியும்.."

6. அவர்கள் துரத்தி விட்ட போது:

'"தமிழகத்தில் மதவாத சக்திகளை காலூன்ற விடமாட்டேன்.."

7. கருணாநிதி வீட்டு கல்யாணத்தின் போது:

"தலைவர் கருணாநிதி தங்கமானவர்"

8. அடுத்த வாரம் கூட்டணி பேரம் படியாது என்று தெரிந்த போது:

"தமிழர்களுக்கு துரோகம் செய்த கருணாநிதியை ஒழிக்க ஒன்றுபடுவோம்.."

9. போகிற போக்கில் பேசியது:

"தமிழ் தேசியத்தை ஒழிக்க திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் .."

10. தடாவில் கைதாகி வெளியே வந்த பின் பேசியது:

"என் வாழ்வில் இனி கலைஞரை எதிர்த்து அரசியல் பண்ண மாட்டேன்.."

11. சென்ற வாரம் பேசிய போது:

"மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் கண்டிப்பாக வருவார்;

அவரை முதல்வராக ஏற்றுக்கொள்ள எந்த ஆட்சேபணையும் இருக்காது.."

12. அதற்கு அடுத்த நாள் பேசியபோது:

"நாங்கள் விஜயகாந்த் தலைமையேற்க மாட்டோம். எங்கள் கூட்டணியில் இடமில்லை; விமானி இல்லாமலே விமானம் டேக் ஆப் ஆகிவிட்டது.."

13. இப்போது:

"விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர்" இது "விஜயகாந்த் அணி" என்று அழைப்போம்.

14. கடைசியாக:

"மதுபழக்கம் உள்ளவர்கள் கட்சியை விட்டு போகலாம் .." வைகோ அறிக்கை.

(கொம்யூனிஸ்ட்களின் மைன்ட் வாய்ஸ்: "நேத்திக்குதான் போய் விஜயகாந்தை கூட்டியாந்திங்க. அதுக்குள்ள போகச்சொன்னா எப்படி")

குறிப்பு: படம் மற்றும் தகவல் - நெட்டில் சுட்டவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக